5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OTT Movies : இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

What To Watch: இந்த வாரம் ஓடிடியில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் களவன் மற்றும் நடிகர்கள் பரத், ரம்யா நம்பீசன் நடிப்பில் தலைமைச் செயலகம், கலையரசன், சாண்டி நடிப்பில் ஹாட் ஸ்பாட், சரா அலிகான் மற்றும் விக்கி கௌஷல் நடிப்பில் ஜரா ஹட்கே ஜரா பச்கே ஆகிய படங்கள் வெளியாகின்றன.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 15 May 2024 15:37 PM
இந்த வாரம் ஓடிடியில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கள்வன் மற்றும் நடிகர்கள் பரத், ரம்யா நம்பீசன் நடிப்பில் தலைமைச் செயலகம், கலையரசன், சாண்டி நடிப்பில் ஹாட் ஸ்பாட், சரா அலிகான் மற்றும் விக்கி கௌஷல் நடிப்பில் ஜரா ஹட்கே ஜரா பச்கே ஆகிய படங்கள் வெளியாகின்றன.

1 / 5
நடிகர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் இவான முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் கள்வன். கடந்த மாதம் திரையரங்கில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தப் படம் மே 14 ஆம் தேதியான நேற்று முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

2 / 5
திட்டம் இரண்டு, அடியே பட இயக்குனர் விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ஹாட்ஸ்பாட். இதில் நடிகர்கள் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வருகின்ற மே 17-ம் தேதி முதல் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

3 / 5
இயக்குநர் வசந்தபாலன் ‘தலைமை செயலகம்’ என்ற இணையத் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். நடிகர்கள் பரத், ரம்யா நம்பீசன், கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், நந்தா குப்தா, சாரா பிளாக் சித்தார்த் விபின், சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்டவர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளார்கள். ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இத்தொடரை ஜீ5 ஓடிடி நிறுவனம் வெளியிடுகிறது. இது வரும் 17-ம் தேதி முதல் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

4 / 5
இயக்குநர் லக்ஷ்மன் உடேகர் நடிகர்கள் சரா அலிகான் மற்றும் விக்கி கௌஷலை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘ஜரா ஹட்கே ஜரா பச்கே’. கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற 17-ம் தேதி முதல் ஜியோ சினிமாவில் காணக் கிடைக்கின்றது.

5 / 5
Follow Us
Latest Stories