தமிழ் சினிமாவில் தாம் தூம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கியவர் சாய் பல்லவி.
கோத்தகிரியில் பிறந்த படுகர் இனத்தை சேர்ந்தவர் என்றாலும் இவர் படித்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான்.
இவரது முழு பெயர் சாய் பல்லவி செந்தாமரை ஆகும். மருத்துவ கல்வியை முடித்த அவர், நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.
வெள்ளிதிரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரையில் பல நடன போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் சாய் பல்லவி. குறிப்பாக உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தென்னிந்தி ரசிகர்களை தன்வசம் கட்டி இழுத்துவிட்டார்.
சிவப்பு அழகும், பொலிவும் தரக் கூடியது என்று சொல்லி வரும் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்தவர் சாய் பல்லவி.
சமீபத்தில் இவர் நடித்த கார்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான 3 விருதுகளை தட்டிச்சென்றார்.