5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dhanush: தனுஷை பார்த்து காப்பியடித்து பள்ளியில் பாஸான சினிமா பிரபலம் – யார் தெரியுமா?

Dhanush with Baba Baskar: தமிழ் சினிமாவில் நன்கு நடனம் ஆடக்கூடிய நடிகர்களில் ஒருவர் தனுஷ். ஒவ்வொரு பாட்டும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அளவுக்கு செம ஜாலியாக நடன அசைவுகளை வெளிப்படுத்துவார். அதற்கு காரணமான நடன இயக்குனர்களில் மிக முக்கியமானவர் பாபா பாஸ்கர் மாஸ்டர் தான். பல பாடல்களில் தனுஷுடன் இணைந்து பாடல் காட்சிகளில் தோன்றியிருப்பார்.

Dhanush: தனுஷை பார்த்து காப்பியடித்து பள்ளியில் பாஸான சினிமா பிரபலம் – யார் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Follow Us
intern
Tamil TV9 | Published: 10 Jul 2024 15:01 PM

பாபா பாஸ்கர்: தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் பாபா பாஸ்கர். சினிமா மட்டுமல்லாது ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக செயல்பட்டு வருகிறார். ஒரு நேர்காணலில் பேசிய பாபா பாஸ்கர், “ஐஸ்வர்யா ராயும் தனுஷும் இணைந்து படித்தவர்கள் என்றால் அதனை ஒரு வதந்தியாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பாபா பாஸ்கரும், தனுஷும் இணைந்து படித்தால் நம்ப மாட்டீர்களா?. நிஜமாகவே தனுஷும் நானும் கிளாஸ்மேட்ஸ் தான். சொல்லப்போனால் நான் எட்டாம் வகுப்பு வரை பாஸ் ஆக தனுஷ் தான் காரணம். அவருக்குப் பின்னால் பெஞ்சில் தான் நான் அமர்ந்திருப்பேன். படிப்பில் தனுஷ் மிகச் சிறந்த திறமைசாலி. நல்லா படிப்பாரு. காதல் கொண்டேன் படத்துல தூங்கிட்டு இருக்க தனுஷ் எழுந்திருச்சு போய் போர்டில் கணக்கு போடுவாரு. நிஜத்திலும் அப்படிப்பட்டவர் தான் தனுஷ். அவர் இருக்கும்  தைரியத்தில் நான் படிக்கவே மாட்டேன். விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளில் கவனம் செலுத்துவேன். அதேபோல் சினிமாவில் நடனத்துறையில் எனக்கொரு வழியை அமைத்துக் கொடுத்தவர் தனுஷ் தான். அவர் இல்லை என்றால் சினிமாவில் நான் இருந்திருப்பேனா என்பது தெரியாது” என கூறியுள்ளார்.

Also Read: Scam : உஷார்.. SBI ரிவார்டு பாய்ண்ட்ஸ் மோசடி.. பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கும் காவல்துறை!

தனுஷ் – பாபா பாஸ்கர் கூட்டணி

ஆரம்பத்தில் பால்ராஜ் என்பவர் நடனம் கற்றுக் கொடுத்த நிலையில் பின்னர் சிவசங்கர் மாஸ்டர் மற்றும் ராஜூசுந்தரம் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார். தமிழில் தனுஷ் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகம் ஆன பாபா பாஸ்கர் அதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களின் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

Also Read: ஆனந்தம் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான வடிவேலு… கால்ஷீட் பிரச்சினையால் உள்ளே வந்த மற்றொரு நடிகர்..!

குறிப்பாக தனுஷ் நடித்த பரட்டை என்கிற அழகுசுந்தரம், பொல்லாதவன், படிக்காதவன், குட்டி, உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, வேங்கை, 3, வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி, தங்க மகன், பவர் பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, ஜகமே தந்திரம், கேப்டன் மில்லர் என ஏகப்பட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் நடித்த குப்பத்து ராஜா படத்தையும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இயக்கியுள்ளார். ஜூலை 12ம் தேதி நடிகர் கமல்ஹாசன்- இயக்குனர் ஷங்கர் கூட்டம் இதில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் பாபா பாஸ்கர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்

பாபா பாஸ்கர் பல பாடல்களில் கேமியோவாக தோன்றி ரசிகர்களிடத்தில் நன்கு பரிட்சையமானவர். மேலும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.