5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Scam : உஷார்.. SBI ரிவார்டு பாய்ண்ட்ஸ் மோசடி.. பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கும் காவல்துறை!

SBI Reward Pints Scam | பொதுமக்களின் வாட்ஸ்அப் அல்லது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளில், SBI ரிவார்டு பாய்ண்ட்ஸ்களை பெற வேண்டும் என்றால் உங்கள் பெயர், முகவரி மற்றும் வங்கி கணக்குக விவரங்களை பதிவிடுங்கள் என அதில் கேட்கப்படுகிறது. அவ்வாறு விவரங்களை பதிவிடும் பொதுமக்களிடம் மோசடிகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Scam : உஷார்.. SBI ரிவார்டு பாய்ண்ட்ஸ் மோசடி.. பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கும் காவல்துறை!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 10 Jul 2024 12:22 PM

SBI ரிவார்டு பாய்ண்ட்ஸ் மோசடி : SBI ரிவார்டு பாய்ண்ட்ஸ் மோசடிகள் குறித்து விழிப்போடு இருக்கும்படி பொதுமக்களுக்கு, தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 73 நபர்கள் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் மோசடி தடுப்பு பிரிவு போலீசாரின் தகவலின் படி, பொதுமக்களின் மொபைல் எண்களை ஹேக் செய்யும் மோசடி காரர்கள் அதன் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். அதுமட்டுமன்றி போலி வாட்ஸ்அப் கணக்குகள் மற்றும் குழுக்களை உருவாக்கி, அதில் SBI ரிவார்டு பாய்ண்ட்ஸ் குறித்து போலி செய்திகளை பரப்புகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வாட்ஸ் அப் குழுக்களில் எஸ்.பி.ஐ வங்கியின் படத்தை வைத்து நம்பிக்கையை உருவாக்குகின்றனர்.

திட்டமிட்டு தகவல்களை திருடும் கும்பல்

இவ்வாறு பொதுமக்களின் வாட்ஸ்அப் அல்லது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளில், SBI ரிவார்டு பாய்ண்ட்ஸ்களை பெற வேண்டும் என்றால் உங்கள் பெயர், முகவரி மற்றும் வங்கி கணக்குக விவரங்களை பதிவிடுங்கள் என அதில் கேட்கப்படுகிறது. அவ்வாறு விவரங்களை பதிவிடும் பொதுமக்களிடம் மோசடிகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரிவார்டு பாய்ண்ட் முடிவதற்கு இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே உள்ளது. உடனே பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்ற வார்த்தைகளுடன் கூடிய லிங்குகள் அனுப்பப்படுகின்றன. பொதுமக்கள் அதை கிளிக் செய்யும்போது APK ஃபைலை பதிவறக்கம் செய்யுமாறு அது கூறுகிறது. அதன்படி APK ஃபைலை பதிவிறக்கம் செய்யும் பொதுமக்களிடம் இருந்து வங்கி விவரம், கடவு சொற்கள் மட்டும் ஓடிபிகள் திருடப்படுகின்றன. அந்த தகவல்களின் மூலம் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணம் சூரையாடப்படுகிறது.

இதையும் படிங்க : Pan Card : பான் கார்டு உஷார்… அதிகரிக்கும் மோசடிகள்… திருடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மோசடியில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்

இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க, பொதுமக்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளுக்கு 2 ஸ்டெப் வெரிஃபிகேஷனை ஆன் செய்யுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். ஒரு செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன்போ அல்லது ஏதேனும் லிங்குகளை கிளிக் செய்வதற்கு முன்போ அதனுடைய நம்பகதன்மையை சோதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : Gold Bonds : தங்க பத்திரம் உள்ளிட்ட சேமிப்பு பத்திரங்கள்.. எதை கவனிக்கனும்? வட்டி மற்றும் முதலீட்டு விவரம்!

மேலும் சமூக ஊடக கணக்குகள், வங்கி கணக்குகளுக்கு கடினமான எளிதில் கண்டுபிடிக்க முடியாத கடவுச் சொற்களை பயன்படுத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறை வழங்கியுள்ளனர். இவற்றை கடைபிடிப்பதன் மூலம் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Latest News