அசத்தல் வீடியோ.. ‘Thug Life’ படத்தில் சிம்பு… ப்ரோமோ வெளியிட்ட படக்குழு!
NEW THUG IN TOWN | சிம்பு நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. அவர் படத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்து அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளது படக்குழு.
நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார். இந்த நிலையில் சிம்பு நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. அவர் படத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்து அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளது படக்குழு.