5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இந்தியன் 2… என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை – நடிகர் ஜெகன் வருத்தம்

Indian 2 Movie: விஜய் டிவியில் சிவகார்த்திகேயனுக்கே சீனியரான ஜெகன் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து வந்தாலும், இன்னமும் தனக்கான அங்கீகாரமே கிடைக்கவில்லை என்று புலம்பியுள்ளார். 2005ம் ஆண்டு பிரசன்னா, லைலா மற்றும் கார்த்திக் குமார் நடித்த கண்ட நாள் முதல் படத்தில் ஃபிரெண்ட் கேரக்டரில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் ஜெகன். ஒரு பக்கம் சினிமாவிலும், இன்னொரு பக்கம் விஜய் டிவியில் ஹோஸ்ட்டாகவும் கலக்கி வந்தார்.

இந்தியன் 2… என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை – நடிகர் ஜெகன் வருத்தம்
நடிகர் ஜெகன்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jul 2024 13:53 PM

இந்தியன் 2 படத்தில் நான் தான் மெயின் ரோல் என நினைத்தேன் ஆனால், இந்தியன் 2 படக்குழுவினர் யாருமே என்னை கண்டுகொள்ளவில்லை என நடிகர் ஜெகன் வருத்தம் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் சிவகார்த்திகேயனுக்கே சீனியரான ஜெகன் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து வந்தாலும், இன்னமும் தனக்கான அங்கீகாரமே கிடைக்கவில்லை என்று புலம்பியுள்ளார். 2005ம் ஆண்டு பிரசன்னா, லைலா மற்றும் கார்த்திக் குமார் நடித்த கண்ட நாள் முதல் படத்தில் ஃபிரெண்ட் கேரக்டரில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் ஜெகன். ஒரு பக்கம் சினிமாவிலும், இன்னொரு பக்கம் விஜய் டிவியில் ஹோஸ்ட்டாகவும் கலக்கி வந்தார். ஆனால் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது என்னவோ சூர்யா நடிப்பில் வெளியான அயன் படம் தான். இந்தப் படத்தில் சூர்யாவின் நண்பராகவும் தமன்னாவின் அண்ணனாகவும் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் ‘இந்தியன்’. இந்த திரைப்படம்  ரசிகர்களின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல் ஹாசன் அப்பா தந்தை என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இதில் அப்பா கமலுக்கு நடிகை சுகன்யாவும் மகன் கமலுக்கு மனிஷா கொய்ராலாவும் நாயகியாக நடித்துள்ளனர். மேலும் கவுண்டமணி செந்தில் நாசர் என பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம்  1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also read… டூப் வேண்டாம்… நானே பன்றேன் – படத்திற்காக 16-வது மாடியில் இருந்து குதித்த அஞ்சலி?

தற்போது இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இயக்கியுள்ளார். மேலும் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், ஜெகன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பல வருடங்களாக இந்தியன் 2 திரைப்படம் எடுக்க முயற்சிகள் நடைபெற்ற வந்த நிலையில், 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி இப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தியன் 2  திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின்  3 பாகம் வெளியாவதாக  படக்குழு அறிவித்துள்ளது.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக் இவ்ளோ தான் நடிகர்கள் பெயராவே சொல்றாங்க, என்னை யாருமே கண்டுக்கல. அந்த படத்தின் புரொட்யூசருக்கே நான் நடிச்சிருக்கிறது தெரியல. படத்தில் நான் தான் மெயின் ரோல் பண்ணியிருக்கேன்னு நான் மட்டும் தான் நினைச்சிட்டு இருக்கேன் என்று நடிகர் ஜெகன் வேதனை தெரிவித்து பேசியது வைரலாகி வருகின்றது.

Latest News