5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Raayan audio launch: ராயன் ஆடியோ லாஞ்ச்… வைரலாகும் தனுஷின் பேச்சு!

Dhanush: தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திரான கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார்.

Raayan audio launch: ராயன் ஆடியோ லாஞ்ச்… வைரலாகும் தனுஷின் பேச்சு!
Raayan audio launch: ராயன் ஆடியோ லாஞ்ச்… வைரலாகும் தனுஷின் பேச்சு!
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jul 2024 17:26 PM

ராயன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நீண்ட காலங்கள் அவர் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் ராயன் படத்தின் மூலம் தனது இயக்குநர் வேலையை தொடங்கியுள்ளார் தனுஷ். தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திரான கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் மற்றும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முன்னதாக இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான, அடங்காத அசுரன் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை தனுஷே எழுதி, ஏ.ஆர். ரகுமானுடன் சேர்ந்து அவர் இசையில் பாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து ’வாட்டர் பாக்கெட்’ என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

வடசென்னையை மையமாகக் கொண்டு இந்த படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அவர் பேசியதாவது, “நான் யாருன்னு எனக்கு தெரியும், என் அப்பா, அம்மாவுக்கு தெரியும், என் பசங்களுக்கு தெரியும், என் ரசிகர்களுக்கு தெரியும், ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக பாடி ஷேமிங்கிற்கு ஆளானவன் நான், தேவையில்லாத வதந்திகள், கெட்டப் பெயர், முதுகில் குத்தும் சம்பவம் என பல விஷயங்கள் நடந்தாலும், இன்னமும் நான் இப்படி உங்கள் வந்து நிற்க காரணமே நீங்க தான்” என பேசியுள்ளார். இது அவரை குறித்து வரும் வதந்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளதாக ரசிகர்கள் சேர் செய்து வருகின்றனர்.

Also read… OTT Movies: எவர்கிரீன் தமிழ் காமெடி படங்கள் லிஸ்ட் இதோ!

மேலும், முதல் படத்திலேயே தான் சினிமாவை விட்டு ஓடி விடுவேன் என நினைத்தேன். ஆனால் எப்படி 50 படங்கள் பண்ணிவிட்டு உங்கள் முன் நிற்கிறேன் என்பதே பெரிய ஆச்சரியமாகவே உள்ளது. நான் யாருடைய ரசிகன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன். ரஜினிகாந்த் சாரின் வீடு போயஸ் கார்டனில் இருக்கிறது. நான் என்னுடைய 16 வயதில் ரஜினி சாரின் வீட்டை பார்க்க வேண்டும் என்று நினைத்து ஒருவழியாக பார்த்தேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடும் போயஸ் கார்டனில் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட போயஸ் கார்டனில் நானும் வீடு கட்ட வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. நான் போயஸ் கார்டனில் வீடு வாங்கக் கூடாதா? அது பெரிய குற்றம் போல பேசுகின்றனர்”. எனத் தெரிவித்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மானிடம் என்னுடைய 50 ஆவது படத்தில் உங்கள் பெயர் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றேன். அவர் இரண்டு நாட்களில் சொல்வதாக சொன்னார். சொன்ன மாதிரி இரண்டு நாள் கழித்து ஃபோன் செய்தார். தான் இப்போது 30 படத்தில் வேலை செய்வதாகவும் இந்த படத்திற்கு யெஸ் சொல்வது ரொம்ப கடினம் என்று சொன்னார். ‘ஆனால் நான் யெஸ் சொல்கிறேன் ‘ என்று ரஹ்மான் சொன்னார். அதற்காக அவருக்கு நன்றி என்றும் தனுஷ் கூறியுள்ளார். இவ்வாறு இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

Latest News