5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

UK Election 2024: பிரிட்டனில் வாக்குப்பதிவு… சவால்களை சமாளித்து வெற்றி பெறுவாரா ரிஷி சுனக்?

பிரிட்டன் பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களை பெற்று ஆட்சியை பிடித்தது.  தற்போது பிரிட்டன் பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், பிரட்டன் பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

UK Election 2024: பிரிட்டனில் வாக்குப்பதிவு… சவால்களை சமாளித்து வெற்றி பெறுவாரா ரிஷி சுனக்?
ரிஷி சுனக்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Jul 2024 13:03 PM

இன்று பிரிட்டன் பொதுத்தேர்தல்: பிரிட்டன் பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களை பெற்று ஆட்சியை பிடித்தது.  தற்போது பிரிட்டன் பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், பிரட்டன் பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. நேற்றுடன் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 4.6 கோடி பேர் வாக்குகளிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் இரண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்புள்ளது. 2023ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டன. அது இந்த தேர்தலில்தான் முதல் முறையாக அமலுக்கு வருகிறது. ஐரோப்பியபிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் இது.

கன்சர்வேட்டிங் vs தொழிலாளர் கட்சி:

பிரிட்டனை பொறுத்தவரை பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையான ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் 650 உறுப்பினர்களை கொண்டது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பிரிட்டனில் ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தில் உள்ளனர். இது அங்கு நடந்த உள்ளூர் தேர்தலில் எதிரொலித்தது. உள்ளூர் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அங்கு நடந்த கவுன்சிலர் தேர்தலில் எப்போது கன்சர்வேட்டிவ் கட்சியை ஆட்சியை பிடித்த வந்த நிலையில், இந்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்து, தொழிலாளர் கட்சி அங்கு வெற்றி பெற்றது.

Also Read: நீல நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாறும் கடல்கள்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

உள்ளூர் தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்று பல ஆண்டுகள் ஆன நிலையில், இந்த முறை வென்றிருக்கிறது.  இதுமட்டுமில்லாமல், விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்டவைகள் பிரதான பிரச்னையாக மாறியுள்ள நிலையில், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால், இந்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி இந்தத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் தேர்தலில் கலக்கும் தமிழர்கள்:

பிரிட்டன் பொதுத்தேர்தலில் 650 எம்.பிக்கள் போட்டியிடுகின்றனர்.  இதில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக பேர் போட்டியிடும் தேர்தலாக இது மாறியுள்ளது. அதன்படி, உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில்தான், கமலாகுகன், டெவினா பால், நரனி ருத்ரராஜன், கிருஷ்ணி, சாஹீர் உசைன் ஆகிய 9 தமிழர்கள் களத்தில் உள்ளனர். சீர்காழியில் பிறந்து இங்கிலாந்தில் கணினி நிறுவனம் நடத்தி வரும் சாஹீர் உசைன் Liberala democrats கட்சி சார்பில் கொரியடல் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிடும் கிருஷ்ணி சென்னையில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  14 ஆண்டுகளுக்கு தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் சூழல் உள்ளதால் இலங்கை தமிழர்களின் உரிமைகள் காக்கப்படும் என மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார். பிரிட்டனில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் பிரதிநிதியாக தமிழர்களின் குரல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று தமிழ் வம்சாவளியினர் கூறுகின்றனர்.

Also Read: விமானம் சைஸ்.. பூமியை நோக்கி வரும் சிறுகோள்.. நாசா கொடுத்த எச்சரிக்கை!

Latest News