5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயம்.. 24 மணி நேரத்திற்கு பின் கிடைத்த அதிர்ச்சி தகவல்!

கிழக்காப்ரிக்க நாடான மலாவியில் அந்நாட்டின் துணை ஜனாதிபதி சவுலோ சிலிமா சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி உள்பட 10 பேர் சென்ற விமானம் நேற்று மாயமானதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. இந்த விபத்தை அடுத்து மலாவி நாட்டில் இன்று துக்க நாளாக கடைபிடிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். உடலைத் தகனம் செய்யும் வரை நாட்டில் உள்ள அனைத்து தேசிய கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயம்.. 24 மணி நேரத்திற்கு பின் கிடைத்த அதிர்ச்சி தகவல்!
மலாவி துணை ஜனாதிபதி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Jun 2024 12:51 PM

துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயம்: கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் அந்நாட்டின் துணை ஜனாதிபதி சவுலோ சிலிமா சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி உள்பட 10 பேர் சென்ற விமானம் நேற்று மாயமானதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. இது குறித்து மலாவி நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், “நேற்று மாயமான மலாவி நாட்டு பாதுகாப்பு விமானத்தை தேடும் பணி சோகத்தில் முடிந்ததை பொதுமக்களுக்கு ஜனாதிபதி அலுவலகமும் அமைச்சரவையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். துணை ஜனாதிபதி சவுலோ சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் சிக்கங்காவா காட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

துரதிஷ்டவசமாக விமானத்தில் பயணித்த அனைவரும் விபத்தில் சிக்கி மரணம் அடைந்துள்ளனர். பாதுகாப்பு வளையத்தில் இருந்து விமானம் மாயமானதை அடுத்து அதைத் தேடும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. மலாவி பாதுகாப்பு படை, காவல்துறை, வான் படை ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த துணை ஜனாதிபதி குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் மலாவி ஜனாதிபதி லாசரஸ் மெகார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

என்னாச்சு?

இந்த விபத்தை அடுத்து மலாவி நாட்டில் இன்று துக்க நாளாக கடைபிடிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். உடலைத் தகனம் செய்யும் வரை நாட்டில் உள்ள அனைத்து தேசிய கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலாவி தலைநகரான லிலாங்வேயிலிருந்து நேற்று காலை 9:17க்கு துணை ஜனாதிபதி பயணித்த விமானம் புறப்பட்டுள்ளது. சுசு சர்வதேச விமான நிலையத்தில் காலை 10:02க்கு அந்த விமானம் தரையிறக்கப்பட விருந்தது என்று தகவல் வெளியாகி உள்ளது.  விமான விபத்தில் அரசியில் தலைவர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.


சமீபத்தில் கூட ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில்  முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற விமானம் குன்னூரில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரா பிரதேச முதல்வராக பதவிவகித்து வந்த ராஜசேகர் ரெட்டி விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest News