5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Soodhu Kavvum 2: ‘சூது கவ்வும் 2’ படத்திலிருந்து ‘என்ன நடக்கும்’ பாடல் இதோ!

YENNA NADAKKUM | சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களுக்கும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார். படத்தில் கருணாகரன், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jun 2024 10:00 AM

கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூது கவ்வும்’. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. ‘சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களுக்கும்’ என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் ‘மிர்ச்சி’ சிவா நடிக்கிறார். படத்தில் கருணாகரன், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து ‘என்ன நடக்கும்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Latest Stories