5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Election: ”காசு செலவு பன்னாதான் இங்க ஜெயிக்க முடியும்” – கவனம் பெறும் ’எலெக்‌ஷன்’ பட ஸ்னீக் பீக்!

Election - Sneak Peek | நடிகர் விஜயகுமார் தற்போது ‘எலக்சன்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ‘சேத்துமான்’ பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கி வருகிறார். ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 17 May 2024 14:08 PM

கடந்த 2016-ல் ‘உறியடி’, 2019-ல் ‘உறியடி 2’ படத்துக்குப் பின் நடிகர் விஜய்குமார் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இடைவெளிக்குப் பின் அவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது ‘ஃபைட் க்ளப்’. இந்தப் படம் சிறந்த மேக்கிங்கால் பாராட்டப்பட்டது. ஆனால் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நடிகர் விஜயகுமார் தற்போது ‘எலக்சன்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ‘சேத்துமான்’ பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கி வருகிறார். ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத, மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow Us
Latest Stories