5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Nivetha Thomas: நிவேதா தாமஸின் ‘35 சின்ன கதை காடு’ படத்தின் டீசர் இதோ!

35 Chinna Katha Kaadu Movie Teaser (Tamil) | தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ். கடைசியாக இவர் தமிழில் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்திருந்தார். அப்படத்துக்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டமல் இருந்த நிவேதா தாமஸ் தெலுங்கில் பிசியானார். இந்த நிலையில் தற்போது நிவேதா தாமஸின் ‘35 சின்ன கதை காடு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Jul 2024 15:42 PM

நிவேதா தாமஸின் ‘35 சின்ன கதை காடு’ படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. விஜய்யின் குருவி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். இதையடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த போராளி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஜில்லா திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து அப்ளாஸ் வாங்கிய அவர், பின்னர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகளாக நடித்து தன்னுடைய யதார்த்த நடிப்பால் அப்படத்திற்கு பலம் சேர்த்திருந்தார்.  தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ். கடைசியாக இவர் தமிழில் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்திருந்தார். அப்படத்துக்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டமல் இருந்த நிவேதா தாமஸ் தெலுங்கில் பிசியானார். இந்த நிலையில் தற்போது நிவேதா தாமஸின் ‘35 சின்ன கதை காடு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Latest Stories