5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Video: இணையத்தில் கவனம் பெறும் மம்முட்டியின் ‘மாயிகா மனமே’ பாடல் வீடியோ

Maayika Maname Video Song | சமீபத்தில் இயக்குநர் வைசாக் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடித்த படம் ‘டர்போ’. ஏற்கெனவே வைசாக் இயக்கத்தில் ‘போக்கிரி ராஜா’, ‘மதுர ராஜா’ ஆகிய படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார். ’டர்போ’ படத்தில் மம்மூட்டியுடன் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, தெலுங்கு நடிகர் சுனில், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் மற்றும் காமெடி ஆகிய இரு ஜானரும் சேர்த்து எடுக்கப் பட்டிருக்கும் இப்படத்தின் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2024 11:19 AM

கடந்த ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ’கன்னூர் ஸ்குவாட்’, ‘காதல் தி கோர்’ ஆகிய மூன்று படங்களும் ஹட்ரிக் வெற்றியை கொடுத்தது. மூன்று வெவ்வேறு கதைக் களத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் மம்முட்டி. பிளாக்பஸ்டர் ஹாரர் பீரியட் படமான பிரம்மயுகம் படத்திற்கு பிறகு மம்மூட்டியின் நடிப்பில் பேக் – பேக் இரு படங்கள் வெளியாக உள்ளத்தால் அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. சமீபத்தில் இயக்குநர் வைசாக் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடித்த படம் ‘டர்போ’. ஏற்கெனவே வைசாக் இயக்கத்தில் ‘போக்கிரி ராஜா’, ‘மதுர ராஜா’ ஆகிய படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார். ’டர்போ’ படத்தில் மம்மூட்டியுடன் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, தெலுங்கு நடிகர் சுனில், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் மற்றும் காமெடி ஆகிய இரு ஜானரும் சேர்த்து எடுக்கப் பட்டிருக்கும் இப்படத்தின் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து ,மாயிகா மனமே’ என்ற பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

Latest Stories