Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரைலரில் இதையெல்லாம் கவனிச்சிங்களா?
பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கமல் இந்த திரைப்படத்தில் டபுள் ஆக்ஷனில் கலக்கி இருந்தார். கமலுடன் இத்திரைப்படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, செந்தில், கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர். சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கமல் இந்த திரைப்படத்தில் டபுள் ஆக்ஷனில் கலக்கி இருந்தார். கமலுடன் இத்திரைப்படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, செந்தில், கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில், சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. லைகா ப்ரோடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இவர்களை தவிர்த்து மறைந்த நடிகர்கள் மனோபாலா, விவேக், மாரிமுத்து உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.