துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் முதல் சிங்கிள் இதோ!
Kolladhey Lyric Video | இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். மே 29 அன்று படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் வெங்கி அட்லுரி. இதனைத் தொடர்ந்து இவர் துல்கர் சல்மானை வைத்து தற்போது ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பான் இந்தியன் படமாக உருவாகும் இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். மே 29 அன்று படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் செப்டம்பர் 27, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.