5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கவினின் ‘ஸ்டார்’ படம்… மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Star - Making Video | கவினின் முந்தைய டாடா படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் ஸ்டார் படமும் தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படத்தில் கவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரூ.8 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்‌ஷனை அள்ளியது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 27 May 2024 13:29 PM

கவின் நடிப்பில் கடந்த 10-ம் தேதி ’ஸ்டார்’ படம் திரையரங்குகளில் வெளியானது. சாதாரண மனிதனின் அசாதாரணமான கனவு பற்றிய இப்படத்தை அழகாக எடுத்துக்காட்டி இருந்தார் இயக்குனர் இளன். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ளது. ஸ்டார் படத்திற்கு சென்சார் போர்டு “யு” சான்றிதழ் வழங்கியது. கவினின் முந்தைய டாடா படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் ஸ்டார் படமும் தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படத்தில் கவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரூ.8 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்‌ஷனை அள்ளியது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அதிக பார்வைகளைப் பெற்று வருகின்றது.

Follow Us
Latest Stories