விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் இதோ!
Maharaja Release Trailer (Tamil) | Vijay Sethupathi | இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதி தோற்றம் அமைந்திருந்தது.
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக தயாராகி உள்ளது ‘மகாராஜா’. இந்தப் படத்தை ’குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதி தோற்றம் அமைந்திருந்தது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதில் சலூன் கடைக்காராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில் படம் வருகின்ற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் என படக்குழு ஒன்றை வெளியிட்டுள்ளது.