விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ டீசர் இதோ!
MPM Teaser | இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிரித்வி அம்பேர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரோமியோ’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் தற்போது ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிரித்வி அம்பேர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.