Sarfira: ’சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் ‘சர்ஃபிரா’ ட்ரெய்லர் இதோ!
Sarfira – Official Trailer | இயக்குநர் சுதா கொங்கரா இந்தியில் ரீமேக் செய்துள்ளார். இதில் அக்ஷய் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உடன் நடிகர்கள் ராதிகா மதன், பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக் ‘சர்ஃபிரா’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. நடிகர் சூர்யாவுக்கு அவருடைய சினிமா பயணத்தில் முக்கியமான ஒரு படமாக இது அமைந்தது. அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கொரோனா காலகட்டம் என்பதால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் தியேட்டரில் வெளியாகவில்லையே என ரசிகர்கள் வருத்தமும் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இந்தியில் ரீமேக் செய்துள்ளார். இதில் அக்ஷய் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உடன் நடிகர்கள் ராதிகா மதன், பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.