Anjaamai: அஞ்சாமை படத்திலிருந்து ‘ஆரிரிராரோ’ பாடல் இதோ!
Aaririraaro - Lyric Video | ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் நீட் தேர்வு முறையில் எழுந்த குழப்பம், கேள்வி மற்றும் அதனால் ஏற்பட்ட கல்விமுறை மாற்றம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படம் கடந்த 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தில் இருந்து ‘ஆரிரிராரோ’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘இறுகப்பற்று’ படத்துக்குப் பிறகு நடிகர் விதார்த் அடுத்து நடித்திருக்கும் படம் ‘அஞ்சாமை’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும், இப்படத்தை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜா, இயக்குநர் லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இந்தப் படத்தில் நடிகர்கள் வாணி போஜன் மற்றும் ரகுமான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் நீட் தேர்வு முறையில் எழுந்த குழப்பம், கேள்வி மற்றும் அதனால் ஏற்பட்ட கல்விமுறை மாற்றம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படம் கடந்த 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தில் இருந்து ‘ஆரிரிராரோ’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.