ஒரு வாழ்க்கை… ஐந்து மனைவிகள் – வைரலாகும் ‘ஹனிமூன்ஸ்’ ட்ரெய்லர்!
Nagendran's Honeymoons | முதன்மை கதாபாத்திரத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ளார். இவருக்கு வேலையில்லாத நிலையில் 5 பெண்களை திருமணம் செய்து கொண்டு எப்படி சமாளிக்கிறார் என்பது படத்தின் கதையாக அமைந்துள்ளது. இவருடன் கிரேஸ் ஆண்டனி, கனி கஸ்தூரி, ஷ்வேதா மேனன், அல்ஃபி பஞ்சிகரன் மற்றும் நிரஞ்சனா அனூப் ஆகியோர் நடித்துள்ளனர்.
நித்தின் ரென்ஜி பானிக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ளது நாகேந்திரன்ஸ் ஹனிமூன் என்ற வெப் தொடர். முதன்மை கதாபாத்திரத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ளார். இவருக்கு வேலையில்லாத நிலையில் 5 பெண்களை திருமணம் செய்து கொண்டு எப்படி சமாளிக்கிறார் என்பது படத்தின் கதையாக அமைந்துள்ளது. இவருடன் கிரேஸ் ஆண்டனி, கனி கஸ்தூரி, ஷ்வேதா மேனன், அல்ஃபி பஞ்சிகரன் மற்றும் நிரஞ்சனா அனூப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஜூலை 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடரின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.