5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தன்னை கடித்த பாம்பை திரும்ப கடித்த நபர்.. அடுத்து நடத்தது என்ன தெரியுமா?

Man Bite Snake | பீகாரில் சந்தோஷ் லோஹர் என்ற 35 வயது நபரை பாம்பு கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பாம்பை திரும்ப கடித்தால் உடம்பில் விஷம் ஏறாது என்ற மூடநம்பிக்கையின் காரணமாக பாம்பை கடித்துள்ளார். இதன் காரணமாக பாம்பு உயிரிழந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ் மறுநாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

தன்னை கடித்த பாம்பை திரும்ப கடித்த நபர்.. அடுத்து நடத்தது என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 06 Jul 2024 23:03 PM

பாம்பை கடித்து கொன்ற இளைஞர் : ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் பல வியக்கத்தக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தற்போது சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் அவை வெளியே தெரிய வருகின்றன. அப்படி ஒரு நிகழ்வு தான் பீகாரில் நடந்துள்ளது. பீகாரை சேர்ந்த சந்தோஷ் லோஹர் என்பரை பாம்பு கடிக்க, அவரும் அந்த பாம்பை திரும்ப கடித்துள்ளார். இதன் காரணமாக பாம்பு உயிரிழந்துவிட்டது. ஆனால் சந்தோஷ் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். பாம்பு கடித்தால் உயிரே போய்விடும் என்ற அபாயம் உள்ள நிலையில், சந்தோஷின் உடல்நலத்தில் எந்த வித பிரச்னையும் இன்றி அவர் வழக்கம்போல இயல்பாக உள்ளார். சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள் இது ஒரு விநோதமான சம்பவம் என குறிப்பிடுகின்றனர். ஏனெனில் இதுவரை இது போன்ற சம்பவங்கள் நடந்ததே இல்லை.

மூட நம்பிக்கை

பீகாரின் நவாடா நகரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். ரயில்வே பாதை அமைக்கும் பணி செய்துவந்த அவர், நாள் முழுவதும் பணி செய்து முடித்துவிட்டு அசதியாக தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷை பாம்பு கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ், பாம்பு கடித்தவுடன் மீண்டும் பாம்பை கடித்தால் விஷம் ஏறாது என்ற மூட நம்பிக்கையால் பாம்பை கடித்துள்ளார். இதன் காரணமாக பாம்பு உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து சந்தோஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மருத்துவர்களையும், அந்த ஊர் பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : ராட்சத விலங்குகள் அழிவுக்கு காரணம் மனிதர்களா?.. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது என்ன?

5 முறை பாம்பு கடித்து ஆரோக்கியமாக இருக்கும் நபர்

முன்னதாக இதேபோல உத்தரப் பிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 5 முறை பாம்பு கடித்தும் எந்த வித பாதிப்பும் இன்றி நலமுடன் இருக்கிறார். அவரை 2 மாதங்களில் 5 முறை பாம்பு கடித்துள்ளது. அதன்படி, ஜூன் 2, ஜூன் 10 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளிலும் ஜூலையில் 2 முறையும் அவரை பாம்பு கடித்துள்ளது. ஆனால் இத்தனை முறை பாம்பு கடித்தும் அவர் நலமுடன் உள்ளார். ஒருமுறை பாம்பு கடித்தாலே உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில், இவர் 5 முறை பாம்பு கடித்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பது ஆச்சர்யமளிக்கிறது.

Latest News