5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? முக்கியச் செய்திகள் இதோ!

இன்றைய தலைப்புச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? முக்கியச் செய்திகள் இதோ!
முக்கியச் செய்திகள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 Jul 2024 07:14 AM

தமிழ்நாடு

 • நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தின்படி சென்னையில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிபறி சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரும் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 • தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். சுகாதார துறை செயலாளர் ககன் தீப் ஊரக துறைக்கு மாற்றம்.
 • தமிழ்நாட்டில் 3,5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூடாது என கல்விக் கொள்கை துறை பரிந்துரை
 • கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான மாதேஷ்,சிவக்குமார் உள்ளிட்ட 11 பேரையும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி ஸ்ரீராம் அனுமதி வழங்கி உத்தரவு

Also Read: சென்னையில் பல இடங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த எரியா?

இந்தியா:

 • ஹிந்துக்கள் என சொல்லிக்கொள்ளும் நீங்கள் வன்முறை, வெறுப்புவாத்ததில் ஈடுபடுகிறீர்கள் என மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு. சிவனின் படம் காட்டி பாஜகவினர் மட்டுமே ஹிந்துக்கள் அல்ல எனவும் விமர்சனம்.
 • ஹிந்துக்கள் எல்லோரும் வன்முறையாளர்கள் என ராகுல் காந்தி பேசுவது சரியில்லை என பிரதமர் மோடி பதில். ராகுல் காந்தியின் செயல் மிகவும் கடுமையானது எனவும் கருத்து.
 • அக்னிவீர் திட்டம் மூலம் ராணுவ வீரர்களை யூஸ் அண்ட் த்ரோ பணியாளர்கள் போல் பயன்படுத்துகின்றனர் என ராகுல் விமர்சனம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னிவீர் திட்டம் நீக்கப்படும் எனவும் கருத்து
 • இந்துக்களை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – மக்களவையில் அமித்ஷா பதில்
 • நீட் மறுத்தேர்வு முடிவுகள் வெளியாகின, முழு மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 61 ஆக குறைந்துள்ளது.

உலகம்:

 • ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் நேற்று புதிய H3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
 • சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்தில் விமானப் பயணிகள் சேவை கட்டம் மற்றும் விமானத்தின் புறப்பாடுக்கான கட்டணத்தை சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் அதிகரித்துள்ளது.
 • ஆஸ்திரேலியாவில் விமானம் புறப்படும் முன் மயங்கி விழுந்து இந்திய வம்சாவளி பெண் உயிரிழந்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தை பார்க்க செல்லும்போது நடந்த சோகம்.

விளையாட்டு:

 • யூரோ கால்பந்து தொடரில் ஜார்ஜியாவை 4-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது ஸ்பெயின்.
 • விம்பிலள்டன் டென்னில் போட்டி: 2வது சுற்றுக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்.
 • விம்பிள்டன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட், கிரிக்கேர் டிமிட்ரோவ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

Also Read: தமிழ்நாட்டின் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம் .. விவரங்கள் இதோ..