5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ராயப்பேட்டை மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிக் கும்பல்.. அலறிய நோயாளிகள்.. நடந்தது என்ன?

சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் கைது செய்யப்பட்ட அறிந்த இவரது ஆதரவாளர்கள் சிலர் ஆயுதங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அத்துமீறி நுழைந்தனர். அப்போது, கைதான 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீசாரை மிரட்டியும் உள்ளனர். இதற்கு போலீசார் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த உபகரணங்கள், கருவிகள் போன்றவற்றை நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிக் கும்பல்.. அலறிய நோயாளிகள்.. நடந்தது என்ன?
ராயப்பேட்டை மருத்துவமனை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Jun 2024 15:36 PM

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: சென்னை மயிலாப்பூர், தேனாம்பட்டை உள்ளிட்ட பகுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனை அடுத்து சரண், ராஜேஷ், தினேஷ் ஆகிய இளைஞர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்து ஏராளமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கைதான 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் 3 மணிக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் கைது செய்யப்பட்ட அறிந்த இவரது ஆதரவாளர்கள் சிலர் ஆயுதங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அத்துமீறி நுழைந்தனர்.

அப்போது, கைதான 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீசாரை மிரட்டியும் உள்ளனர். மேலும், அந்த கும்பல் கையில் இருந்த பிளேடை தூளாக உடைத்து முழுங்கி வாயில் ரத்தத்துடன் 3 பேரை விடுவிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதற்கு போலீசார் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த உபகரணங்கள், கருவிகள் போன்றவற்றை நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். இதனால், அங்கிருந்த நோயாளிகள் அங்குமிங்கும் ஓடினர். இதனை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

Also Read: அடுத்த ஒரு வாரத்திற்கு வெளுக்கப்போகும் மழை… எந்தெந்த மாவட்டங்கள்?

சிறிது நேரமாக மருத்துவமனையை அடித்து நொறுக்கிய பின்னர், ரவுடிக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இதனால், ராயப்பேட்டை மருத்துவமனையில் பரபரப்பான சூழல் நிலவியது. ரவுடிகளின் பிரச்னையால் ராயப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

கண்டனம்:

இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பாக ரவுடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

போதைப்பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடே அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில், பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது. இந்த விடியா திமுக அரசின் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், அதனை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கேளாதார் காதில் சங்கு ஊதிய கதையாக கும்பகர்ண தூக்கத்தில் உள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

சேதமடைந்த மருத்துவ உபகரணங்களை உடனடியாக சீர்செய்வதுடன், தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல் மீது தக்க சட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு, இனியாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்றார்.

Also Read: களத்தில் விஜய்.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் த.வெ.க தலைவர்!

Latest News