5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஓம் ஒலி.. ருத்ராட்சம் மாலை.. பிரதமர் மோடியின் 3வது நாள் தியானம்!

Prime Minister Modi: தியானத்தின்போது காவி வேட்டி, காவி சட்டை, காவி துண்டுக்கு மாறினார். நெற்றியில் திருநீற்று பட்டையுடன், சந்தனம்-குங்குமம் அணிந்திருந்தார். ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி தியானம் செய்தார். மண்டபத்தில் ஓம் என்ற ஒலி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

ஓம் ஒலி.. ருத்ராட்சம் மாலை.. பிரதமர் மோடியின் 3வது நாள் தியானம்!
பிரதமர் மோடி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 01 Jun 2024 13:43 PM

நேற்று முன்தினம் மாலை விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து மாலை 6.45 மணியளவில் தியானத்தை தொடங்கினார். நேற்று முன்தினம் மாலையில் இருந்து தியானம் செய்து வரும் அவர், இன்று பிற்பகல் வரை தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு மேல் தியானம் செய்ய இருக்கிறார். கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி மாலை வந்தார். பகவதியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகு, படகு மூலம் கடல் நடுவே உள்ளவிவேகானந்தர் மண்டபம் சென்றார். அங்கு பகவதியம்மனின் ஸ்ரீபாதத்தை தரிசனம் செய்தார். பின்னர், விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நள்ளிரவில் தியான மண்டபம் அருகே உள்ள அறையில் சற்று ஓய்வெடுத்தார்.

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி கன்னியாகுமரி வந்தார். அன்று மாலை 3.55 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மோடி மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அதன்பின், 5.45 மணிக்கு விவோகானந்தர் மண்டபத்தில் அவர் தியானம் செய்யத் தொடங்கினார். அடுத்த நாளான நேற்று 31ஆம் தேதி வரை இது தொடர்ந்தது. பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய உள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், பழச்சாறு போன்ற திரவு உணவுகளை மட்டுமே எடுத்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று நாட்களும் பாதுகாப்பு படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கி இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

Also read… நடிகர் ரஜினிகாந்த் இமயமலை ட்ரிப்.. கேதர்நாத் கோயிலில் வழிபாடு

தியானத்தின்போது காவி வேட்டி, காவி சட்டை, காவி துண்டுக்கு மாறினார். நெற்றியில் திருநீற்று பட்டையுடன், சந்தனம்-குங்குமம் அணிந்திருந்தார். ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி தியானம் செய்தார். மண்டபத்தில் ஓம் என்ற ஒலி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. தியான மண்டபத்தில் இருந்து மாலை 3.30 மணியளவில் அவர் வெளியே வருகிறார். தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப் படகில் பிரதமர் மோடி செல்கிறார். பின்னர் அவர் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.

Latest News