5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சென்னையில் யூடியூபர்களை மிரட்டிய இளைஞர்கள்.. ரிச்சி தெருவில் நடந்த பரபரப்பான சம்பவம்..

பிரபல யூடியுபரான நந்தா, A2D என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். குறிப்பாக தொழில்நுட்ப ரீதியாகவும், எலக்ட்ரானிக் சாதனப் பொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவை குறித்தும் வீடியோக்களை வெளியிடுவதை நந்தா வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை 15.5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். வழக்கம்போல் ரிச்சி தெருவில் செல்போன் தொடர்பாக நந்தா தனது நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ பதிவு ஒன்றை எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு சில இளைஞர்கள் மது அருந்திக்கொண்டு மடக்கி பிடித்து யூடியூபர்களை வர சொல்லி கூறியுள்ளனர்.

சென்னையில் யூடியூபர்களை மிரட்டிய இளைஞர்கள்.. ரிச்சி தெருவில் நடந்த பரபரப்பான சம்பவம்..
யூடியுபர் மீது தாக்குதல்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 08 Jul 2024 11:34 AM

சென்னையில் யூடியூபர் மீது தாக்குதல்: சென்னையில் பரபரப்பான ரிச்சி தெருவில் வீடியோ எடுத்து கொண்டிருந்த யூடியூபர்களை குடிபோதையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தின் மூலம் வீடியோ பதிவிட்டு புகார் அளித்ததால் மூன்று பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் ரிச்சி ஸ்ட்ரீட் என்பது மிகவும் பிரபலம். எலக்ட்ரானிக் சாதனங்கள், மொபைல் போன்கள் உள்பட பல்வேறு வகையான மின்சார பொருட்கள் இங்கு கிடைக்கும். இந்த சாலையில் ஏராளமான கடைகள் இருந்து வருகின்றன. இதில் தினந்தோறும் பல்வேறு யூடியூபர்கள் இங்கு வந்து வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்கும் நிலையில் பிரபல யூடியுபரான நந்தா, A2D என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். குறிப்பாக தொழில்நுட்ப ரீதியாகவும், எலக்ட்ரானிக் சாதனப் பொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவை குறித்தும் வீடியோக்களை வெளியிடுவதை நந்தா வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை 15.5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். வழக்கம்போல் ரிச்சி தெருவில் செல்போன் தொடர்பாக நந்தா தனது நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ பதிவு ஒன்றை எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு சில இளைஞர்கள் மது அருந்திக்கொண்டு மடக்கி பிடித்து யூடியூபர்களை வர சொல்லி கூறியுள்ளனர்.

ஆனால் இதனை கவனிக்காமல் அந்த யூடியூபர்கள் சென்றுள்ளதால் அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு நபர் அவர்கள் கேமராவை பறிமுதல் செய்து கொண்டு தங்களிடம் வந்து எங்களிடம் பேசுமாறு கூறியுள்ளனர். குறிப்பாக அந்த இளைஞர்கள் நாங்கள் தான் பெரிய ரவுடி என்றும் அவர் அந்த வீடியோவில் கூறும் காட்சி பதிவாகி இருந்தது.மேலும் கேமராவை பறித்து குடிபோதை இளைஞர்கள் பறித்து வைத்துள்ளனர்.

மது பாட்டில்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்ததால் கேமராவை எப்படி வாங்கி செல்வது என தெரியாமல் யூடியுபர் நந்தா மற்றும் நண்பர்கள் அங்கேயே நின்று கொண்டு இருந்துள்ளனர். இவ்வாறு இருக்கும் நிலையில் அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததால் எதுவும் பேசாமல் இருந்த போது, அந்த பகுதி சேர்ந்த மற்றொருவர் அவர்களை சமாளித்து கேமராவை குடிபோதை இளைஞர்களிடமிருந்து வாங்கி கொடுத்துள்ளார்.

இவை அனைத்தும் நந்தா எடுத்த வீடியோவில் பதிவானதால், அதை தனது youtube சேனலில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பல யூடியூபர்கள் மற்றும் நெட்டிசன்கள் வெளியிட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

சமூக வலைதளத்தில் புகார் அளித்ததற்கு ,பதிலளிக்கும் வகையில் சென்னை போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டறியப்பட்டு காவல்துறை விசாரணை செய்வதாக என பதிவிட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் சிந்தாதிரிபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் யூடியூபரை மிரட்டிய விவகாரத்தில் பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் பார்த்திபன், கிஷோர் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் பார்த்திபன் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளதாகவும் கிஷோர் மனைவியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பட்ட பகலில் பரபரப்பான ரிச்சி தெருவில், யூடியூபர்களைமிரட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Also Read: அசாமில் பயங்கரம்.. தன்னை கண்டித்த ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்த மாணவன்..!

Latest News