5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கிளாம்பாக்கத்தில் இனி நோ ட்ராஃபிக்… தமிழக அரசின் சூப்பர் திட்டம்!

Kilambakkam: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வண்டலூர் முதல் காட்டாங்குளத்தூர் வரை முதற்கட்டமாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் எனவும், தேவையற்ற காலவிரயம் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கிளாம்பாக்கத்தில் இனி நோ ட்ராஃபிக்… தமிழக அரசின் சூப்பர் திட்டம்!
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jun 2024 15:36 PM

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோயம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முழுமையான வசதிகள் செய்து முடிக்கும் முன்பே பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக போதிய கடைகள் இல்லை என்பதில் தொடங்கி ஏடிஎம் வசதி கூட இல்ல என்ற புகார் வரை பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக ஜிஎஸ்டி சாலையை கடக்க மேம்பாலம் அமைக்காமல் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்தது, சென்னை மக்கள் ஊருக்குள் செல்ல 30 கிமீ தூரம் செல்ல வேண்டும், டவுன் பஸ் ஏறவே அரை கிமீ சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்தநிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வண்டலூர் முதல் காட்டாங்குளத்தூர் வரை முதற்கட்டமாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் எனவும், தேவையற்ற காலவிரயம் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Also read… சென்னையில் வெயிலின் தாக்கத்தால் 12-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு எதிரில் ஜி.எஸ்.டி. சாலையில் பொதுமக்கள் ஆபத்தான முறையில் சாலையை கடப்பதை தடுக்கும் வகையிலும், அச்சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இதுகுறித்து போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், அச்சாலையில் தேவையான வெள்ளை கோடுகள், வாகன ஓட்டுகளை எச்சரிக்கும் விதமான ஒளிரும் கருவிகள் ஆகியவை தற்போது பொருத்தப்பட்டு வருகின்றன எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Latest News