5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திண்டுக்கல்லில் பேக்கரிக்குள் புகுந்த அரசுப் பேருந்து… அலறியடித்து ஓடிய பெண்கள்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி செல்வதற்காக அரசுப் பேருந்து ஒன்று நேற்று காலை புறப்பட்டது. பேருந்தை சுப்பிரமணி என்ற ஓட்டுநர் இயக்கி உள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்ததும் பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேகமாக வெளியே வந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த இனிப்பகத்திற்குள் புகுந்தது.

திண்டுக்கல்லில் பேக்கரிக்குள் புகுந்த அரசுப் பேருந்து… அலறியடித்து ஓடிய பெண்கள்
திண்டுக்கல்லில் பேக்கரிக்குள் புகுந்த அரசுப் பேருந்து
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 11 Jun 2024 11:19 AM

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காத காரணத்தால் பேருந்து நிலையத்திற்கு வெளியில் இருந்த பேக்கரிக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் உள்ளது காமராஜர் பேருந்து நிலையம்.
பேருந்து நிலையத்திலிருந்து தேனி செல்வதற்காக அரசுப் பேருந்தை சுப்ரமணி என்ற ஓட்டுநர் இயக்கியுள்ளார். அப்போது பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த போது பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்தது பேருந்து. பேருந்து நிலையத்திற்கு எதிரே பேக்கரிக்குள் அடித்து நொறுக்கி புகுந்தது பேருந்து. இதனால் கடைக்குள் வியாபாரம் செய்துக்கொண்டிருந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்த சிசிடிவி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே. எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் பேருந்துகளின் தரம் என்பது எப்பவும் மாறாமல் அப்படியே இருப்பதுதான் வழக்கம். பேருந்தில் பயணிக்கும் போதே பேருந்து ஓட்டையாகி கிழே விழுந்த பயணி, மழை காலங்களில் பேருந்துக்குள் பெய்யும் மழை, பிரேக் பெயிலியர் என தொடர்ந்து அரசு பேருந்துகள் குறித்த செய்திகள் வந்த்கொண்டேதான் இருக்கிறது. அடிக்கடி விபத்தில் சிக்கும் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததே விபத்துக்கு காரணமாக அமைவதாக பொதுமககள் குற்றம் சாட்டுகின்றனர்.

அந்த வகையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி செல்வதற்காக அரசுப் பேருந்து ஒன்று நேற்று காலை புறப்பட்டது. பேருந்தை சுப்பிரமணி என்ற ஓட்டுநர் இயக்கி உள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்ததும் பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேகமாக வெளியே வந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த இனிப்பகத்திற்குள் புகுந்தது.

Also read… ஆசையாக பானி பூரி சாப்பிட்ட இளைஞர்.. பரிதாபமாக உயிரிழந்த சோகம்.. திண்டுக்கல்லில் ஷாக்!

இதனால் கடைக்குள் இருந்த பிரியா என்ற பெண் காயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவரின் உதவியோடு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும் கடையில் இருந்த கண்ணாடி பொருட்கள் மற்றும் ஸ்வீட்டுகள் அனைத்தும் சேதமடைந்தது. இதனிடையே விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest News