5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 08 July 2024: இன்றைய டாப் செய்திகள்.. விக்கிரவாண்டி தேர்தல் டூ நீட் வினாத்தாள் கசிவு வரை!

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 08 July 2024: இன்றைய டாப் செய்திகள்.. விக்கிரவாண்டி தேர்தல் டூ நீட் வினாத்தாள் கசிவு வரை!
முக்கியச் செய்திகள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 08 Jul 2024 20:59 PM

தமிழ்நாடு:

 • விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
 • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 14ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 • சென்னையின் புதிய காவல்துறை ஆணையராக ஏடிஜிபி அருண் நியமிக்கப்பட்டுள்ளார். கமிஷ்னராக இருந்த சந்தீப் ராய் ரத்தூர் காவல்துறை பயிற்சி பள்ளி டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 • சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார். ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணியாகும் என்று பேட்டி அளித்துள்ளார்.
 • காவல் அதிகாரிகள் மாற்றுவதால் எதுவும் மாறப்போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
 • கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்றுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா:

 • நீட் தேர்வு வினாத்தாள் ஒரு இடத்தில் மட்டும் தான் கசிவு என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப், டெலிகிராமில் கசிந்து இருந்தால் காட்டு தீ போல பரவியிருக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
 • நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பயனடைந்தவர்கள், தவறிழைத்தவர்கள் கண்டறியாவிட்டால் நிச்சயம் மறுதேர்வு நடத்த வேண்டும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ, என்டிஏவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 • ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலிய பயணங்கள் மூலம் இந்தியாவுக்கும் அந்நாடுகளுக்கும் இடையேயான உறவு ஆழமடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 • மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளார். வன்முறை சம்பவங்கள் தொடர்பாகவும், நிவாரண முகாம்களில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 • அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி. நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

உலகம்:

 • அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி. மாஸ்கோவில் பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
 • சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் முந்தைய பிரதமரின் திட்டத்தின் ரத்து செய்வதாக பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
 • பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடது முன்னணியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே தற்போதைய அதிபர் மேக்ரானின் மறுமலர்சி கட்சி மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு:

 • விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா காலிறுதிக்கு முன்னேறினார்.
 • டி20 உலகக் கோப்பை தொடரில் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்ட நிலைய்ல, யார் யாருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்ற விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
 • ராகுல் டிராவிட்டுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அளித்தால் பொருத்தமாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

Latest News