5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

T20 World Cup: சூப்பர் ஓவர் சுற்றில் பாகிஸ்தானை வென்ற அமெரிக்கா..!

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் அசத்தல் வெற்றி பெற்றது. அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியுள்ளதால், சூப்பர் ஓவர் சுற்றுடன் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

T20 World Cup: சூப்பர் ஓவர் சுற்றில் பாகிஸ்தானை வென்ற அமெரிக்கா..!
அமெரிக்க அணி
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 08 Jun 2024 01:50 AM

T20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த போட்டிகள் வரும் ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. டெக்சாஸ் நகரில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்து சமன் செய்தது. சூப்பர் ஓவர் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

Also Read: ஜூன் 24ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. என்ன காரணம்?

பாகிஸ்தான் வீரர்களான ரிஸ்வான் 9 ரன்களிலும், உஸ்மான் கான் 3 ரன்களிலும், ஃபஹர் ஸ்மான் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தன. பாகிஸ்தான் அணி 26 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் மற்றும் ஷதப் கான் இணைந்து 72 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷதப், 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாபர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது போல் 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்திகார் அகமது 18 ரன்களிலும், ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ரன்களும் எடுத்தனர். ஃபகர் சமான் 11 ரன்களுக்கு அவுட்டாக 26 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து பாகிஸ்தான் திணறியது. ஷதாப் கான் 40 ரன்களை எடுத்து அணிக்கு வலுசேர்த்தனர். ஷாகின் அஃப்ரிதி 2 சிக்ஸர்களை அடித்து 23 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். இறுதியில், பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்களை மட்டுமே சேர்த்தது.

Also Read: Weapon: வெப்பன் படம் எப்படி இருக்கு… விமர்சனம் இதோ!

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்காவின் கேப்டன் மோனங்க் படேல் மற்றும் ஸ்டீவன் டெய்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டெய்லர் 12 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரீஸ் கவுஸ் 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மோனங்க். பட்டேல் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஆரோன் ஜோன்ஸ் 36 ரன்களும், நிதிஷ் 14 ரன்கள் எடுத்திருந்த போது 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு அமெரிக்க அணி 159 ரன்களை எட்டியது.

இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய அமெரிக்கா அணி 18 ரன்கள் எடுத்தது. 6 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் 1 விக்கெட்டை இழப்பிற்கு 13 ரன்களை மட்டுமே எடுத்தது.

Latest News