5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Natarajan: லட்சியத்தை அடைவதற்கு ஏழ்மையை ஒரு தடையாக கருதக் கூடாது – நடராஜன்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் 2020 ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்த அவர், தொடர்ந்து, ஐபிஎல் போட்டியில் தற்போது ஹைதாராபாத் சன்ரைசர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், சேலத்தில் தான் படித்த கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் நடராஜன் மாணவர்களிடையே பேசிய அவர், பெரிய லட்சியத்தை அடைவதற்கு ஏழ்மையை ஒரு தடையாக கருதக் கூடாது, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் தெரிவித்துள்ளார்.

Natarajan: லட்சியத்தை அடைவதற்கு ஏழ்மையை ஒரு தடையாக கருதக் கூடாது – நடராஜன்
நடராஜன்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 09 Jul 2024 11:47 AM

சேலம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய நடராஜன், மாணவர்களிடத்தில் தன்னுடைய சிறுவயது முதல் கிரிக்கெட்டில் அவர் எதிர்கொண்ட பல பிரச்சினைகளை எடுத்துரைத்தார். நான் கஷ்டப்படும் காலத்தில் கிடைக்கும் உதவியின் மதிப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எவ்வளவு உயரத்திற்கு போனாலும் தன்னடக்கத்தை மறக்கக்கூடாது என்று கூறிய அவர், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நம்மால் இதை செய்ய முடியுமா என்று நினைத்தால் நிச்சயமாக உங்களால் செய்ய முடியாது எண்ணத்திற்கு வலிமை உள்ளதை வலியுறுத்தினார். சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்து இன்று இந்த அளவுக்கு வந்திருக்கிறேன் என்றால் என்னுடைய தன்னம்பிக்கையும் உழைப்பும் தான் காரணம். இதே போல் நீங்கள் பெரிய அளவுக்கு வந்து விட்டால், நீங்கள் கடந்து வந்த பாதையை என்றும் மறந்து விடக்கூடாது. தான் நன்றி மறவாமல் இருப்பதால்தான் இவ்வளவு நல்ல உள்ளங்களை சம்பாதித்து இருக்கின்றேன்.

Also Read: ZIM Vs IND: அபிஷேக் சர்மா சதத்தால் பெருமைக்கொண்ட யுவராஜ்சிங்..!

எதிர்காலத்தில் நீங்கள் எவ்வளவு உயரம் சென்றாலும் உங்களால் சில பேர் வாழ்ந்தார்கள் என்றால் அது வாழ்நாள் முழுவதும் உங்களுடைய தலைமுறைக்கு கேட்கும். இன்னும் என் கிராமத்தைச் சார்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் எங்கு கிரிக்கெட் விளையாட சென்றாலும் என்னுடைய சொந்த செலவில் அவர்களை அனுப்பி வைப்பேன். பஞ்சாப் அணிக்கு முதன் முதலில் நான் செல்லும்போது ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டேன். எனக்கு ஹிந்தி தெரியாததால் நான் அங்கு தனிமையை உணர்ந்தேன். இன்னும் சொல்லப் போனால் எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அங்கு இருந்த ஸ்ரீதர் என்ற பயிற்சியாளர் மட்டும் தான் என்னுடன் தமிழில் பேசி எனக்கு உதவினார். சேவாக்கும் எனக்கு துணையாக இருந்தார். இந்தி தெரியவில்லை என்பதால் நான் அங்கு சோர்ந்து போகவில்லை. எனவே மாணவர்களே இந்த பருவத்திலேயே பல மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள்”, என்று நடராஜன் மாணவர்களுக்கு கூறினார்.

Also Read:  NEET: நீட் மறுதேர்வுக்கு உத்தரவிடுமா உச்ச நீதிமன்றம்? பாயிண்டை பிடித்த தலைமை நீதிபதி!

சிஎஸ்கே டீம் ஏன் நல்லா பர்ஃபாமன்ஸ் பன்றாங்க என்றால், தோனிய பார்த்தாலே டீம்காக நாம விளையாட வேண்டும் என்ற உள்ளுணர்வு வரும். சிலரை பார்த்து பேசினால் மிதப்பது போல இருக்கும். தோனியை பார்க்கும் போது அந்த வைப் அப்படியே வருகிறது. தோனி கிட்ட இருக்குற வைப் வேறு. அந்த மாதிரி ஒரு பாசிட்டிவ் மனிதர் தான் தோனி. அவர் இருக்கும் அணி ஏன் சிறப்பாக செயல்படுகிறது என்றால், அவரைப் பார்த்தாலே நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தோன்றும். தோனி ஒரு பாசிடிவ் மனிதர் அவர். அதேபோன்று தல அஜித் எனக்கு ஸ்பெஷல். எனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய பின்னர் அனைவரின் கார் கதவையும் திறந்து வழி அனுப்பி வைத்தார். இது போன்ற மனிதர்களை சந்திக்கும் போது வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தன்னம்பிக்கை வரும்” என்றார்.