5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Haris rauf : ரசிகருடன் பொதுவெளியில் சண்டையிட்ட பாகிஸ்தான் வீரர்.. வீடியோ வைரல்..!

பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் அமெரிக்காவில் ரசிகர் ஒருவருடன் பொதுவெளியில் சண்டையிட்டு அடிக்க செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிலையில் அந்த ரசிகர் கிண்டல் செய்ததால், அடித்தாகவும், இந்தியர் என்று நினைத்து தான் ஹரிஷ் ராஃப் கோவத்தில் அடிக்க முற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Haris rauf : ரசிகருடன் பொதுவெளியில் சண்டையிட்ட பாகிஸ்தான் வீரர்.. வீடியோ வைரல்..!
பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 19 Jun 2024 13:20 PM

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றான லீக் சுறோடு பாகிஸ்தான் அணி வெளியேறி உள்ளது. போட்டியிலிருந்து வெளியேறினாலும், அமெரிக்காவில் குடும்பத்துடன் பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் சுற்றிப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் ரசிகர்களுடன் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஸ் ரவூஃப் சண்டையிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தில் வெளியான அந்த வீடியோவில் ஹரீஸ் ரவூஃப், தனது மனைவியுடன் நடந்து செல்கிறார். அப்போது அவருக்கு நேர்திசையில் சற்று தொலைவில் இருந்த ரசிகர்கள் ரவூஃபை ஏதோ சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அதை கவனித்த ரவூஃப், அவர்களை நோக்கி காலில் இருந்த செருப்பைக்கூட அப்படியே கழட்டிவிட்டு, செடிகளை தாண்டி பாய்ந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயற்சிக்கிறார். அவரது மனைவி அவரை கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில், அவருடன் இருந்தவர்களும், ரவூஃபை சமாதானம் செய்கின்றனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அவர்கள் இந்தியர்கள் என்று சொல்கிறார். அதற்கு அவர்கள், இல்லை நாங்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறுவது வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். முதல் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி நேற்று அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியது. பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டினை பலரும் விமர்சித்து வரும் நிலையல், தற்போது பொதுவெளியில் ரசிகர்களுடன் சண்டையிட்டு வருவது சமூகவலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Also Read: Kajal Aggarwal Photos : கால் முளைத்த பூவே… ஹேப்பி பர்த்டே காஜல் அகர்வால்!

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சமூக வலைத்தளத்தில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டா என்று நினைத்தேன். ஆனால், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதால், விளக்கம் அளிக்க நான் கடமைப்பட்டிருக்கின்றேன் என்று கூறியுள்ளார். நாங்கள் அனைத்து விதமான விமர்சனங்களையும் பொதுத்தளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் தான் இருக்கின்றோம்.  எங்களை விமர்சிக்க ரசிகர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், அதே சமயம் விமர்சனம் என்ற பெயரில் எங்களின் குடும்பத்தினரை விமர்சிக்கும் போது பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. அதை நான் தட்டிக்கேட்க தயங்க மாட்டேன். யாராக இருந்தாலும் குடும்பத்தினருக்கும் பெற்றோர்களுக்கும் மதிப்பு வழங்க வேண்டும் என்று ஹரிஸ் ரவுப் கூறியிருக்கிறார்.

Also Read: Body Pain: நாள்பட்ட உடல் வலிகளுக்கு இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!

மேலும், பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், ஷாகித் அஃப்ரிடி ஆகியோர் பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி குறித்து குற்றம் சாட்டியுள்ளனர். மறுபுறம் அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் அணியில் ஒற்றுமை இல்லை எனக்கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.