5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vastu Tips : காலை கண் விழித்ததும் பார்க்கக் கூடாது விஷயங்கள்.. வாஸ்து சாஸ்திர விவரங்கள்!

Morning Wake Up | வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது சில வகையான பொருட்களை பார்க்கவே கூடாது. அப்படி பார்ப்பது சில அசுப பலன்களுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் என்றும் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது காலையில் எழுந்ததும் பார்க்கக்கூடாதவை என்னென்ன என்று பார்க்கலாம்.

Vastu Tips : காலை கண் விழித்ததும் பார்க்கக் கூடாது விஷயங்கள்.. வாஸ்து சாஸ்திர விவரங்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 10 Jul 2024 16:33 PM

வாஸ்து சாஸ்திரம் : : நாம் காலையில் எந்த மனநிலையுடன் படுக்கையில் இருந்து விழிக்கிறோமோ அதே மனநிலையோடு தான் நாள் முழுவதும் இருப்போம் என ஒரு கருத்து உள்ளது. ஒருவேளை காலையில் விழிக்கும்போதே துக்க செய்தியை கேட்டால் அந்த நாள் முழுவதும் துக்கமாக இருக்கும் என்றும் மகிழ்ச்சியான செய்தி கேட்டால் அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற கூற்றும் உள்ளது. காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இருந்தால், நம் நாள் முழுவதும் நன்றாக இருக்கும். நம் வேலையை சுலபமாக செய்யலாம். காலையில் மந்தமாக இருந்தால், நாள் முழுவதும் மந்தமாக இருப்போம். எந்த வேலையும் செய்ய முடியாது, எல்லாம் குழப்பமாக இருக்கும். எதுவும் சரியாக செய்ய முடியாது. சில சமயங்களில் எதிர்பாராத பிரச்சனைகளும் ஏற்படும்.

மேலும், வாஸ்து சாஸ்திரத்தின் படி, எழுந்திருக்கும் போது சில வகையான பொருட்களை பார்க்கவே கூடாது. அப்படி பார்ப்பது சில அசுப பலன்களுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் என்றும் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது காலையில் எழுந்ததும் பார்க்கக்கூடாதவை என்னென்ன என்று பார்க்கலாம்.

நிழலை பார்க்க கூடாது

நீங்கள் காலையில் எழுந்ததும் உங்கள் நிழலையோ, மற்றவர்களின் நிழலையோ பார்க்கவே கூடாது. இதனாலேயே தீமைகள் எல்லாம் நடக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். அதனால்தான் காலையில் எழுந்ததும் நிழலைப் பார்க்கவே கூடாது.

அழுக்குப் பாத்திரங்களை பார்க்க கூடாது

வாஸ்து சாஸ்திரத்தின்படி, காலையில் எழுந்தவுடன் சமையலறையில் உள்ள அழுக்குப் பாத்திரங்களைப் பார்க்கக் கூடாது. இதைப் பார்த்தால் உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அது உங்களை ஏழையாக்கும் என்பது ஐதீகம். அதனால் சமையல் பாத்திரங்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : Dream Theory: உங்களுக்கு எந்த மாதிரி கனவு வருகிறது? கனவு அர்த்தம் இதுதான்!

கண்ணாடியை பார்க்க கூடாது

காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்காதீர்கள். கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்க்கவே கூடாது. இதைப் பார்ப்பதன் மூலம் உங்களுக்கு எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் உற்சாகமாக இருக்க முடியாது. காலையில் எழுந்ததும் முகம் கழுவி கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : இந்த ராசியினருக்கு மகிழ்ச்சியிலும், மன அமைதியிலும் குறைவே இருக்காது.. எந்த எந்த ராசிகள் தெரியுமா?

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News