5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kidney Cancer : கிட்னி கேன்சர்.. இந்த பிரச்னை எல்லாம் உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும்!

இன்றைய காலகட்டத்தில் பொற்றிடுவது இல்லாத மனிதனை வில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு புற்றுநோயின் தாக்கம் நிறைந்து காணப்படுகிறது. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், ரத்த புற்றுநோய், வாய் புற்றுநோய் என உடலின் உள் உறுப்புகள் அனைத்திலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. நேற்றைய தினம் உலக சிறுநீரக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. இது எவ்வாறு ஏற்படுகிறது இவை பாதிக்கும் காரணிகள் குறித்து காணலாம்.

Kidney Cancer : கிட்னி கேன்சர்.. இந்த பிரச்னை எல்லாம் உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும்!
சிறுநீரகம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 17 Jun 2024 08:05 AM

சிறுநீரகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகைகள் உலக சிறுநீரக புற்றுநோய் தினம் ஜூன் 15ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது. தற்போதைய அவசர உலகில் நாம் சாப்பிடும் பல பொருட்கள் சிறுநீரகங்களை பாதிக்கின்றன. பெரும்பான்மையான மக்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகின்றனர். சிறுநீரக செல்களில் காசினோமா என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இந்த நோயை பற்றி மக்கள் அறிந்து கொள்வது அவசியமாகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உலக சிறுநீரக புற்று நோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறதா? சர்வதேச சிறுநீரக புற்றுநோய் கூட்டணி 45க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளின் குழுவானது சிறுநீரகக் புற்றுநோயை பற்றி பொது மக்களுக்கு உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்த நோய் பற்றி மக்கள் அறிந்து கொள்ளவும் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவும் இது உதவுகிறது.

Also Read: EB Rate: மின் கட்டணம் உயர்வு… புதுச்சேரியில் அமலுக்கு வந்தது… புது அறிவிப்பு!

சிறுநீரக புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது அதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து காணலாம்.

உடல் பருமன்

உடல் எடை அதிகரிப்பது சிறுநீரக புற்று நோய்க்கு வழி வகைகள் அதனுடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது. உடல் பருமன் ஹார்மோன் சமநிலையின்மையால் நாள்பட்ட அழச்சியை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சிறுநீரக புற்று நோயின் அபாயத்தை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. கொழுப்பை உருவாக்கும் திசுக்கள் ஈஸ்ட்ரோஜனை அதிக அளவில் உற்பத்தி செய்வதால் இது புற்றுநோய் உருவாக காரணமாக அமைகிறது.

உயர் ரத்த அழுத்தம்

புற்றுநோயுடன் காரணிகளுக்கு உயர் ரத்த அழுத்தமும் காரணமாக அமைகிறது. சிறுநீரகத்தில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது இவை புற்று நோயை உருவாக்குவதில் அதிக பங்கு வகிக்கிறது. உயர் ரத்த அழுத்தத்திற்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த நோய் எளிதில் ஏற்படுகிறது.

Also Read: தென்னிந்திய மொழிகளில் வெளியான டாப் 10 த்ரில்லர் படங்கள் ஒரு லிஸ்ட்!

சிறுநீரக நோய்

பல வருடங்களாக சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு புற்றுநோய் எளிதில் ஏற்படுகிறது. ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிப்பது இதனால் டயாலிசிஸ் செய்பவர்கள். சிறுநீரக செயல் இழப்பு சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு சிறுநீரக புற்று நோய் எளிதில் ஏற்படுகிறது.

புகைப்பிடித்தல்

சிறுநீரக புற்று நோய்க்கான முக்கிய காரணியாக அமைவது புகைபிடித்தல். புகையிலையில் உள்ள ரசாயனங்கள் சிறுநீரகங்களில் சேதப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. புகைப்பிடிப்பது புகைப்பொருட்களை பயன்படுத்துவது எளிதில் சிறுநீரக புற்று நோய்க்கு வழி வகிக்கிறது. சாதாரண மனிதர்களை காட்டிலும் புகை பிடிப்பவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் அதிக அளவில் ஏற்படுத்துகிறது.

Latest News