5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Virus: மழைக்காலத்தில் அதிகரிக்கும் வைரஸ் நோய்கள்… பாதுகாக்கும் வழிமுறைகள்..!

நம்முடைய உலகம் எவ்வளவு வேகமா வளர்ந்து வருகிறதோ, அதே நேரத்தில் அழிவு பாதையை நோக்கி செல்கிறது. பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆராய்சியாளர்கள் அடையாளம் கண்டாலும், அதே நேரத்தில், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பல பிரச்சினைகளையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ்கள் மனிதர்களை அழிவு பாதையை நோக்கி கொண்டு செல்வதாக மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் குறித்து காணலாம்.

Virus: மழைக்காலத்தில் அதிகரிக்கும் வைரஸ் நோய்கள்… பாதுகாக்கும் வழிமுறைகள்..!
வைரஸ்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 08 Jul 2024 08:53 AM

இரண்டு வருடத்திற்கு முன்பு கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் கோடிக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது. அதனைத்தொடர்ந்து, தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது மழைக்காலம் தொடங்கியு நிலையில், தற்போது தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிலும் தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் மழைக்கால தொற்று நோய்களான டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, டைஃபாய்டு, செரிமான பிரச்சனைகள் என பரவி வருகிறது. இது போன்ற நோய்கள் தொடர்ந்து சில சமயங்களில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. இவற்றில் இருந்து காக்க நோய் எதிர்ப்பு அதிகப்படுத்தக்கூடிய  நல்ல உணவு உடற்பயிற்சி, போன்றவற்றோடு உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும்.  முன்னோர்கள் காலத்தில் பயன்படுத்தக்கூடிய கசாயம் போன்றவை நம்மை பாதிகாக்கிறது.

Also Read: Coffee: காபி பருகுவதால் இவ்வளவு பக்க விளைவுகளா?… அதிர்ச்சி தகவல்கள்..!

பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளை வைரஸ்கள் எளிதில் தாக்குகிறது. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே தடுப்பூசி போடுவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். பல தொற்று நோய்களைத் தடுப்பதில் தடுப்பூசிகள் முக்கியமானவை என்பதால், தடுப்பூசிகள் போடுவதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். கிருமிகள் பரவுவதைத் தடுக்க, குறிப்பாக உண்ணும் முன் அல்லது உங்கள் முகத்தைத் தொடும் முன் கைகளை சானிடைசர் கொண்டு அடிக்கடி கழுவவுது. எங்கு வெளியில் சென்றுவந்தாலும், குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகும் அவர்களின் முகம், கை, மற்றும் கால்களை நன்றாக கழுவ வேண்டும். பின்னர் தினமும் குளிப்பதை உறுதிசெய்யவேண்டும். இதனால் தொற்று கிருமிகள் பரவாது தடுக்க முடிகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது சிறந்த வழியாக உள்ளது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் நிறைந்த சீரான உணவை உட்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும்.

Also Read: Tulsi Garland: துளசி மாலை அணிவதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்..!

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது.. வயதானவர்களாக இருப்பின் நடைபயிற்சி நன்மையளிக்கிறது. உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், சரியான உடல் செயல்பாடுகளை பராமரிக்கவும் நிறைய தண்ணீர் குடிக்கவும். தினமும் குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீர் அருந்ததுவது நன்மையளிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற நோய்களுக்கு பங்களிக்கக்கூடிய காரணிகளை கவனமாக சுத்தமாக சுத்தம் செய்து கொசு போன்றவை ஆங்காங்கே தேங்கி இருக்கும் தண்ணீரில் பெருகாமல் பாதுகாத்து.  வீட்டினையும், வீட்டிற்கு வெளியே உள்ள இடத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது சிறந்தது.