5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பப்பாளி இலைகளின் ஆரோக்கிய நன்மைகள்..!

பப்பாளியில் ஏராளமான நன்மைகள் இருப்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். பழங்காலந்தொட்டே பாரம்பரிய இயற்கையான மருத்துவ முறைகளில், பப்பாளி மரத்தில் உள்ள காய், பூ, பழம் என அனைத்தும் மருத்துவ பொருட்களாக உள்ளன.  குறிப்பாக பப்பாளி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில்  டெங்கு, டைஃபாய்டு போன்ற நோய்களுக்கு ரத்த சிவப்பணுக்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க மருத்துவ குணம் வாய்ந்த  பப்பாளி இலையின் சாறு முக்கிய பங்காற்றுகிறது. பப்பாளியின் நன்மைகள் குறித்து காணலாம்.

பப்பாளி இலைகளின் ஆரோக்கிய நன்மைகள்..!
பப்பாளி இலை
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 11 Jun 2024 11:08 AM

நாம் அனைவரும் பப்பாளி மரத்தில் பழங்களை சாப்பிடும் அளவிற்கு, அந்த மரத்தில் இருக்கும் காய்களையும், இலைகளையும் விரும்புவதில்லை. ஆனால் அந்த பப்பாளி மரத்தின் இலை நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல்வேறு வகையான சத்துக்களை வழங்குகிறது. டெங்கு காய்சலுக்கு பப்பாளி இலைகளை மருந்தாக பயன்படுத்துவதன் மூலம், விரைவில் குணமைடயலாம். அந்த வகையில், பப்பாளி இலைகளை சாறு, பொடி, கசாயம் என்ன எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வது சிறப்பானதாக அமைகிறது.பப்பாளி இலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கே போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை உள்ளடக்கியதாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

Also Read: Black Papper: மிளகு பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்..!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியை குறைக்கவும், அவர்களை புத்துணர்ச்சியாக வைக்கவும் பயன்படுகிறது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, இரத்த சர்க்கரையை குறைத்து உடலை சீராக்க உதவுகிறது. டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைக்கு பப்பாளி இலைகள் பயன்படுகிறன. பப்பாளி இலை சாறு பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரித்து, மீட்புக்கு உதவுவதாக நம்பப்படுகிறது. பெண்களுக்கு மட்டுமில்லாமல், தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு முடிஉதிர்வு பிரச்சினை பெரிய அளவில் உள்ளது. அதற்கு தீர்வாக பப்பாளி இலைகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பப்பாளி இலைச் சாறை பொடுகைக் கட்டுப்படுத்தவும், பளபளப்பைக் கூட்டவும், முடியை வலுப்படுத்தவும் கண்டிஷனராக பயன்படுகிறது.

Also Read: Amla: நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பப்பாளி இலையில் உள்ள பப்பெய்ன் மற்றும் சைமோபபைன் உள்ளதால், அவை புரதங்களை உடைத்து ள் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பப்பாளி இலைகள், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகளவில் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒட்டுமொத்தமாக, பப்பாளி இலைகள் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற செரிமானக் கோளாறுகளைப் போக்க பப்பாளி இலைகள் பயன்படுகின்றன. கீல்வாதம் போன்ற நிலைகளில் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கவும் பப்பாளி இலைகள் உதவுகின்றன. பப்பாளி இலைகள், குறிப்பாக நமது உடலில் ரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த செல்கள் அழிவதை தடுக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து வயிற்றில் ஏற்படக்கூடிய புண்களையும் குணப்படுத்த உதவுகிறது.

 

 

Latest News