5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Hair: கோடைக்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்தும் உணவுகள்..!

கோடைகாலத்தில் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கக்கூடியவை உணவுப் பொருட்கள். கோடைகாலங்களில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்காக சாப்பிடக்கூடிய உணவுகள் ஏராளம் உள்ளன. அவற்றைக்காணலாம்.

Hair: கோடைக்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்தும் உணவுகள்..!
முடி உதிர்தல்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 29 May 2024 18:59 PM

நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவு வகைகள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் முக்கியமானதாக அமைகிறது. குறிப்பாக முடி உதிர்வதில் உணவிற்கு முக்கிய பங்கு உள்ளதாக நம்பபடுகிறது. முடியின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக உணவுகள் உள்ளன. முடி உதிர்வுக்கு காலநிலை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. பருவநிலை மாற்றத்தின் போது அதிகப்படியான வெப்பம் ஈரப்பதம் உள்ள இடங்களில் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப முடி உதிர்வு ஏற்படுகிறது.

பழங்கள்

பழங்களில் வைட்டமின்கள் மற்றும் நிறைய தாது சத்துக்கள் நிறைந்துள்ளதால் முடி உதிர்வை தடுக்கிறது. கோடை காலங்களில் அதிகப்படியான பழங்கள் உட்கொள்வதால் மனித உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கிறது. குறிப்பாக தலைமுடியை ஆரோக்கியமாகவும் வலுப்படுத்தவும் பழங்கள் உதவி செய்கின்றன. முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பழங்கள் உதவுகின்றன. தர்பூசணி, பெர்ரி, வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன. மேலும் முடியின் வளர்ச்சிக்கு மற்றும் ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது.

Also Read: செரிமானம் பிரச்னையா? வீட்டிலேயே சரி செய்ய சிம்பிள் ஜூஸ்!

காய்கறிகள்

பழங்களுக்கு அடுத்து காய்கறிகள் முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதனால் நேரடியாக வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் கிடைக்கின்றது. இவை உடலில் உள்ள உறுப்புகளையும் தாண்டி முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்தை அளிக்கிறது. பச்சை காய்கறிகளை உட்கொள்வதாலும் அதனை வேகவைத்து உட்கொள்வதனாலும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன முட்டைக்கோஸ், கீரை வகைகள் போன்றவை சிறந்த உணவாக உள்ளது. கோடைகாலங்களில் அதிக அளவில் கிளைகளை எடுத்துக் கொள்வதனால் தாது சத்துக்கள் இரும்பு சத்துக்கள் போன்றவை உடலுக்கு கிடைக்கின்றன. இவை முடியை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

விதைகள்

எண்ணெய் வித்துக்களான சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள், எள் போன்ற எண்ணெய் வித்துக்களில் ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஹைட்ரேட்டிங் எண்ணைகள் அதிக அளவில் உள்ளதால் முடி உதிர்வை கட்டுப்படுத்தி அதிகப்படியான வளர்ச்சியை தூண்டுகிறது. இவை கோடை காலங்களில் மட்டும் இல்லாமல் சாதாரண நாட்களிலும் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது.

Also Read: Sunlight: சூரிய ஒளியினால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து ஒரு பார்வை..!

பருப்பு வகைகள்

பாதாம், முந்திரி, அக்ரூட் போன்ற பருப்பு வகைகளில் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது இவை முடியின் வேர்க்கால்களை வலுவாக்கி உறுதியாகவும் இடமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. பருப்பு வகைகளை அன்றாட வாழ்வில் அதிகளவில் எடுத்துக் கொள்வதனால் முடியின் வளர்ச்சிக்கும் சரும ஆரோக்கியத்திற்கும் உடல் நலத்திற்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

காய்கறிகள்

முடியின் வளர்ச்சிக்கு காய்கறிகள் மிகவும் துணை புரிகின்றன காய்கறிகளில் உள்ள பயோடின் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு ஏராளமான பயன்களை தருகிறது கோடைகாலங்களில் அதிக அளவிலான காய்கறிகளை உட்கொள்வதால் நிறைய சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைக்கின்றன அதிலும் குறிப்பாக கேரட் பீட்ரூட் போன்ற காய்கறிகளை சாப்பிடுவதால் முடி உதிர்வு முற்றிலும் தடுக்கப்படுகிறது.

Latest News