5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ulcer avoid foods: அல்சர் போன்ற பிரச்சினையிலிருந்து விடுபட தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்படும் ஒரே பிரச்சிணை அல்சராகவே உள்ளது. இந்த பிரச்சினைக்கு ஆளவதற்கு முக்கிய காரணியாக இருப்பது உணவு தான். தற்போது அதிலிருந்து விடுபடவும் உணவுப்பொருட்களே காரணமாகின்றன. அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலில் பல பிரச்சியை உருவாக்குகிறது. உடல் நலனை பாதிக்கும் சில உணவுகளை தவிர்ப்பது பல பிரச்சினைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

Ulcer avoid foods: அல்சர் போன்ற பிரச்சினையிலிருந்து விடுபட தவிர்க்க வேண்டிய உணவுகள்..!
அல்சர்
intern
Tamil TV9 | Updated On: 08 Jul 2024 09:52 AM

அல்சர் : நாம் வளர்ந்து வரும் அவசர உலகில், வேலைகளின் அழுத்தம் காரணமாக சாப்பிடுவதையே மறந்து விடுகிறோம். இதனால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. முக்கியமாக அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வயிற்று வலி, குடல் புண் போன்ற எண்ணற்ற நோய்களுக்கு ஆளாக்குகிறது. குடலில் ஏற்படும் புண்கள் பல விதமான வயிறு மட்டுமில்லாமல், வாய், குடல் போன்றவற்றிலும் பிரச்சினையை கொண்டு வருகிறது. வயிற்றில் உருவாகும் புண்கள் உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களைக் குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்று கூறுகிறோம். இதனை தவிர்க்க நாம் தவிர்க்க கூடிய சில உணவுகள் குறித்து காணலாம்.

காரமான உணவுகள்

பொதுவாகவே அனைவரும் காரமான உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. அதிலும் குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு காரமான உணவுகளை தவிர்ப்பது கட்டாயமாகிறது. காரமான உணவுகள் வயிற்றுப் புறணியை எரிச்சலடையச் செய்து அல்சர் பிரச்சினையை அதிகப்படுத்துகிறது. காரத்தூள்,மிளகுத்தூள், சூடான சாஸ் அல்லது மற்ற வாசனையான மசாலாப் பொருட்களுடன் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். சிட்ரஸ் பழங்கள் மற்றும் பழச்சாறுகள், தக்காளி மற்றும் வினிகர் ஆகிய உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

காபி பொருட்கள்

நாம் அனைவரும் காலை எழுந்தவுடன் காபி குடிப்பதை பழக்கப்படுத்தி கொண்டுள்ளோம். அவை வயிற்றில் அமில உற்பத்தியைத் அதிகப்படுத்தி, இது அல்சர் அறிகுறிகளை உருவாக்குகிறது. காபி, டீ, கோலா மற்றும் எனர்ஜி பானங்கள் ஆகியவற்றை உட்கொள்வதைக் குறைப்பதும், உடன் ஆல்கஹால் போன்றவை வயிற்றுப் புண்ணை அதிகப்படுத்தி, வயிற்றில் அமில உற்பத்தியை தூண்டுகிறது.

பானங்கள்

கார்பனேற்றப்பட்ட, குளிரூட்டப்பட்ட பானங்கள் வீக்கம் மற்றும் வாயுவை அதிகரித்து, இது அல்சர் அறிகுறிகளை அதிகப்படுத்தலாம். அதற்கு பதிலாக ஸ்டில் வாட்டர் அல்லது ஹெர்பல் டீகளைத் தேர்வு அருந்தலாம். இயற்கையாக விளைந்த பழச்சாறுகளை உட்கொள்வது சிறந்த பலனளிக்கும். பால் குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும், எரிச்சல் ஏற்படாது என்று சிலர் கூறுவார்கள். இது தவறாகும். பால் வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரதம், நோய் குணமடைவதைத் தாமதப்படுத்துகிறது

 

துரித உணவுகள்

துரித உணவுகள் மற்றும் ப்ரீ பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சேர்க்கைகள் மற்றும் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். முடிந்தவரை முழு, பதப்படுத்தப்படாத உணவுகளைத் தேர்வு செய்யவும். உடன் கொழுப்பு உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் அல்சர் அறிகுறிகளை மோசமாக்குகிறது. வறுத்த உணவுகள், கொழுப்பு நிறைந்த இறைச்சிகள் மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களை உட்கொள்வதை கட்டாயம் நிறுத்த வேண்டும்.

 

 

Latest News