5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Walking backwards: பின்னோக்கி நடப்பதன் மூலம் இவ்வளவு நன்மைகளா..!

உடற்பயிற்சி என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அதிக அவசியமான ஒன்றாக தற்போதைய சூழலில் மாறி வருகிறது. உடற்பயிற்சி என்றால் நடை பயிற்சி மட்டுமே சிலருக்கு நினைவுக்கு வருகிறது ஒரு நாளைக்கு பத்து நிமிடம் வேகமாக நடப்பதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கப் பெறுவதாக உடற்பயிற்சி வல்லுநர்கள் நேராக நடந்து செல்வதை காட்டிலும் பின்னோக்கி நடந்து செல்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம் என்றும் கூறுகின்றனர்.

Walking backwards: பின்னோக்கி நடப்பதன் மூலம் இவ்வளவு நன்மைகளா..!
நடைப்பயிற்சி
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 10 Jun 2024 21:29 PM

பின்னோக்கி நடப்பது உடலில் உறுதியையும் சமநிலையையும் மேம்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவர் திடீரென்று பின்னோக்கி நடப்பது அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் முதலில் வீட்டிலேயே நடப்பது சிறந்தது என்றும் கூறப்படுகிறது. திடீரென்று பின்னோக்கி நடப்பதன் மூலம் தடுமாறி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால் வீட்டிற்குள் நடக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நேராக நடக்கும் பொழுது நம்முடைய மூளைக்கு வேலைக்கு கொடுப்பதை நாம் மறந்து விடுகிறோம் ஆனால் பின்னோக்கி நடக்கும் பொழுது, பக்கத்தில் நடப்பதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. பின்னோக்கி நடப்பதன் மூலம், நாள்பட்ட முதுகு வலிகள் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. இதய ஆரோகியத்தை பலப்படுத்தி இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

Also Read: யானைக் குட்டிக்காக கண்ணீர் விட்டு அழுத வனத்துறை.. கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்!

முன்னோக்கி நடந்தால் என்ன பயன் கிடைக்குமோ அதே தான் பின்னோக்கி நடப்பதன் மூலம் கிடைக்கப்பெறுகிறது பின்னோக்கி நடப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கவும் முடிகிறது. பின்னோக்கி நடப்பவர்களுக்கு முடக்குவாதம் கேழ்வாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது. முன்னோக்கி நடப்பதை விட பெண்ணோக்கி நடக்கும் போது அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது என்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

மன அழுத்தம் கவலையை நீக்கவும் பின்னோக்கி நடப்பது உதவி செய்வதாக கூறப்படுகிறது. பின்னோக்கி நடப்பது மூளைக்கு அமைதியை தருகிறது. பின்னோக்கி நடப்பது மூளைக்கு வித்தியாசமான பல வேலைகளை செய்ய உதவுவதாகவும் ஆய்வில் கூறுகின்றனர். நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுவதாகவும் கூறப்படுகிறது.

Also Read: Coconut Water: கிட்னி கல்லை கரைக்கும் இளநீர்.. இவ்வளவு நன்மைகள் இருக்கா?

முன்னோக்கி நடப்பதை விட 3.5 கிலோமீட்டர் வேகத்தில் தலைகீழாக பின்னோக்கி நடப்பது நாப்பது சதவீதம் கல்லூரிகள் எரிக்க உதவுகிறது என்று அறிஞர்கள் கூறுகின்றனர், பின்னோக்கி நடப்பது தசை வலிமையை அதிகப்படுத்தி நமது உடலின் இயக்கவியலை அதிகப்படுத்துகிறது சாதாரண நடைப் பயிற்சிகள் கிடைக்கும் பலன்களை காப்பிலும் பின்னோக்கி நடப்பதில் ஏராளமான நன்மைகள் கிடைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பின்னோக்கி நடைபயிற்சி செய்வதை விரும்புகின்றனர்.

Latest News