5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Black Papper: மிளகு பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்..!

மிளகு நம்முடைய முன்னோர்கள் காலத்திலிருந்து பயன்படுத்தக்கூடிய ஒரு மூலிகை பொருளாகவும் சமையல் பொருளாகவும் உள்ளது. மிளகு உற்பத்திகள் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. ஆனால் நம்முடைய இந்திய மிளகு தரத்திலும் குணத்திலும் மனதிலும் முதலிடத்தில் உள்ளதாக பல்வேறு நாடுகளை சார்ந்த மக்களும் கூறுகின்றனர்.

Black Papper: மிளகு பயன்படுத்துவதால்  ஏற்படக்கூடிய நன்மைகள்..!
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 10 Jun 2024 22:06 PM

சுற்றுச்சூழலினால் ஏற்படும் அலர்ஜி காரணமாக பலருக்கு தும்மல் ஏற்படுகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதனை நிர்வகிப்பது மிகவும் கடினமாக உள்ளது. சளி செரிமானம் தும்மல் பல் வலி என உடல் முழுவதும் வெவ்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தீர்வு அளிக்கக்கூடிய ஒரே பொருளாக மிளகு உள்ளம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிளகு தும்மலுக்கு தீர்வாக அமைகிறது என்று கூறப்படுகிறது. தினமும் காலையில் வெதுவெதுப்பான நேரில் முக்கால் டீஸ்பூன் கருப்பு மிளகு தூளை கலந்து குடிப்பதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கிறது. கருப்பு மிளகு ஒரு ஆக்சிஜனேற்றியாகவும் எடையை குறைப்பதற்கும் பயன்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி புற்றுநோய் வருவதை தடுக்கிறது. குடல் மற்றும் வயிற்றை சுத்தப்படுத்துகிறது.

Also Read: சத்யராஜூடன் உள்ள குழந்தை யார் தெரியுமா.. சத்யராஜ் பகிர்ந்த தகவல்..!

கருப்பு மிளகு பொட்டாசியத்தை உள்ளடக்கியதாக உள்ளதாலும், இதில் உள்ள பெப்பரைன் மூளையில் உள்ள அறிவுற்று செயல்பாட்டை அதிகரித்து, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. மேலும், ரத்த சிவப்பான உற்பத்திக்கு உதவுகிறது மேலும் கால்சியம் மற்றும் வைட்டமின் பி சக்தியை உடலுக்கு வழங்குகிறது.

மிளகு அன்றாடம் பயன்படுத்துவது மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கப்படும் அதே நேரத்தில் மிளகாய் கழித்து சாப்பிடுவதால், ஈறுகளுக்கு பலம் கிடைப்பதுடன் பல் பிரச்சனைகளுக்கு முற்றிலும் தீர்வளிக்கிறது. கருப்பு மிளகு ஒரு ஆக்சிஜன் ஏற்றதாக உள்ளதால் எடையை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் மற்றும் துடிப்பு விகிதத்தை ஒழுங்குப்படுத்தி ஆரோக்கிய நன்மைகளை மனித உடலுக்கு வழங்குகிறது. புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது இதில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் டி போன்றவை குடல் பகுதிகளில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்குகிறது.

Also Read: Coconut Water: கிட்னி கல்லை கரைக்கும் இளநீர்.. இவ்வளவு நன்மைகள் இருக்கா?

கருப்பு மிளகு பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும் என்றாலும் கருமிளகு தும்மலை தடுக்கிறது என்பதற்கு எந்த அருவிகள் பூர்வமான ஆதாரமும் இல்லை என்பதை உண்மையாக உள்ளது. கருமிளகு நல்ல வாசனை உணர்திறன் கொண்ட நபர்களுக்கு தும்மலை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. கருமிளகில் உள்ள கலவை பைபரின் வளர்ச்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட மிளகு நல்ல நிவாரணியாக உள்ளது.

உலகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தையமின், ரிபோபிளேவின், நியாஸின் முதலிய தாது பொருட்களும், உயர் சத்துக்களும் உள்ளன. நெஞ்சு சளி நுரையீரல், செரிமான மண்டல உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்க மிளகு உதவுகிறது. சுவாசப்பாதையில் இருக்கும் அடைப்பை நீக்கி சைனஸ் மூக்கடைப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்ளது. செரிமான பிரச்சனைக்கு மிளகை பயன்படுத்துவதன் மூலம் எளிதில் நிவாரணம் பெறலாம்.

Latest News