5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தினமும் வெற்றிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

வெற்றிலை என்பது மிகச்சிறந்த மூலிகை ஆகும். அதே நேரத்தில் வெற்றிலையுடன் சுண்ணாம்பு கலந்து சாப்பிடுவது வாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெற்றிலையை புகையிலை கலந்து பயன்படுத்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.  வெறும் வெற்றிலை மட்டுமே உடலுக்கு நல்லது செய்யும் மூலிகையாக உள்ளது. சுண்ணாம்பு, புகையிலை என வெற்றிலையுடன் பலவகையான கலவைகள் இணைவது உடல் நலத்துக்கு நல்லது அல்ல. 

தினமும் வெற்றிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?
வெற்றிலை
intern
Tamil TV9 | Updated On: 17 Jun 2024 08:04 AM

தினமும் வெற்றிலை எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கியங்களை பெறலாம். வெற்றிலையில் அயோடின், பொட்டாசியம், வைட்டமின் கே, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. திருமண நிகழ்ச்சி, கோயில் திருவிழாக்கள், பல்வேறு மதங்கள் சார்ந்த விழாக்களிலும் வெற்றிலை பாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர், தாம்பூலத்தில் நிறைய வெற்றிலைகளை வைத்து வரவேற்பதை பார்த்திருப்போம். திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் வெற்றிலை போடுவது வழக்கமாக உள்ளது. நிகழ்ச்சிகள் பரிமாறப்பட்ட பலவக உணவுகளையும் சாப்பிட்ட பின்னர் சரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்காக தான் வெற்றிலை தாம்பூலம் தொடங்கியது.

Also Read: உலக சிறுநீரகப் புற்றுநோய்… பாதிக்கும் காரணிகள் என்ன..!

மருத்துவ குணம் வாய்ந்த பொருளாகவும் வெற்றிலை உள்ளதால் பல்வேறு தரப்பட்ட மக்களும் வெற்றிலையை விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். உடல் எடை குறைவு செரிமான பிரச்சனை, நரம்பு தளர்ச்சி என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக உள்ளது.

நாம் அன்றாடம் உணவுக்கு பின்னர் வெற்றிலையை எடுத்துக் கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:

உடல் எடை குறைய இரண்டு வெற்றிலையும் ஐந்து மிளகு வைத்து மென்று சாப்பிட்டு வர உடல் எடை குறையும். அதை போல் வெற்றிலையை சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

வெற்றிலையில் அதிக அளவிலான செரிமான உற்பத்தியை மேம்படுத்தும் நொதிகள் காணப்படுவதால், வயிறு பிரச்சனைகளை சரி செய்யவும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக அமைகிறது. செரிமானத்தை அதிகப்படுத்தி உடல்நலத்தை பேணி காக்கிறது.

Also Read: தென்னிந்திய மொழிகளில் வெளியான டாப் 10 த்ரில்லர் படங்கள் ஒரு லிஸ்ட்!

வெற்றிலைகள் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் பாக்டீரியாவை அழிக்கிறது. வெற்றிலையில் உள்ள நோய் எதிர்ப்பு பண்புகள் வாயில் துர்நாற்றத்தை போக்கி சுத்தப்படுத்துகிறது. தீங்குவில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

வெற்றிலையை அதிக அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் வளர்ச்சியை மாற்றத்தை செயல்படுத்தும் காரணிகளை மேம்படுத்தலாம். எடையை சரியாக பராமரிக்கவும் வெற்றிலை உதவுகிறது. தினசரி இரண்டு வெற்றிலைகளை எடுத்துக் கொள்வதால் ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்துகிறது. இதனால் பெரும்பாலானோர் உணவுக்கு பின்னர் வெற்றிலை சாப்பிடுகின்றனர்

வெற்றிலையுடன் சுண்ணாம்பு கலந்து சாப்பிடுவது வாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெற்றிலையை புகையிலை கலந்து பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்துகிறது.  வெறும் வெற்றிலை மட்டுமே உடலுக்கு நல்லது செய்யும் மூலிகையாக உள்ளது. சுண்ணாம்பு, புகையிலை என வெற்றிலையுடன் பலவகையான கலவைகள் இணைவது உடல் நலத்துக்கு நல்லது அல்ல.

Latest News