5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Wayanad Election Results 2024: ராகுல் காந்தி வெற்றி… வயநாடு மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!

வயநாடு தொகுதி தேர்தல் முடிவுகள்: 2024ஆம் மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதி மிகவும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.  இத்தேர்தலில் மீண்டும் ராகுல் காந்தி களமிறங்கினார். அவரை எதிர்த்து சிபிஐ கட்சியின் மூத்த பெண் தலைவர் ஆனி ராஜா போட்டியிட்டார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேந்திரன் இம்முறை போட்டியிட்டார். 20 மக்களவைத் தேர்தல் கொண்ட   கேரளாவில் ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.   இங்கு பதிவான வாக்குகள் நாளை இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரஸின் ராகுல் காந்தி 6 லட்சத்து 47 ஆயிரத்து 445 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.

Wayanad Election Results 2024: ராகுல் காந்தி வெற்றி… வயநாடு மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!
வயநாடு தொகுதி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Jun 2024 20:44 PM

வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி: 2024ஆம் மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதி மிகவும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.  இத்தேர்தலில் மீண்டும் ராகுல் காந்தி களமிறங்கினார். அவரை எதிர்த்து சிபிஐ கட்சியின் மூத்த பெண் தலைவர் ஆனி ராஜா போட்டியிட்டார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேந்திரன் இம்முறை போட்டியிட்டார். 20 மக்களவைத் தேர்தல் கொண்ட   கேரளாவில் ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.   இங்கு பதிவான வாக்குகள் நாளை இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரஸின் ராகுல் காந்தி 6 லட்சத்து 47 ஆயிரத்து 445 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.  சிபிஐ கட்சி சார்பில் போட்டியிட்ட ஆனி ராஜா 2 லட்சத்து 83 ஆயிரத்து 023 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுமார் 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி.

வயநாடு தொகுதி:

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு கடுமையான போட்டி நிலவும். டெல்லி, மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்துள்ள இடசாரிகள், கேரளத்தில் மட்டும் பாரம்பரிய போட்டி கட்சிகளாக உள்ளன. மக்களவைத் தேர்தலின்போது தேசிய அளவில் இந்துத்துவத்தை ஆதரிக்கும் பாஜகவுக்கு எதிரான முக்கியப் போட்டியாளராக காங்கிரஸ் உள்ளதால் சிறுபான்மையினரின் ஆதரவு இயல்பாகவே காங்கிரஸுக்கு கிடைத்துவிடுகிறது. வயாநாடு தொகுதியை பொருத்தவரையில்  பெரும்பான்மையாக இந்துக்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர கிறிஸ்தவர்கள், தலித், பழங்குடிகள் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். ஆனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் சிறுபான்மை வாக்குகள் உள்ளன.

வாக்காளர்களின் எண்ணிக்கை:

கேரளாவில் மொத்தம் 2 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 326  வாக்காளர்கள் உள்ளனர்.

  1. ஆண் வாக்காளர்கள் – 1,31,02,288
  2. பெண் வாக்காளர்கள் – 1,31,02,288
  3. மூன்றாம் பாலினத்தவர் – 309

முந்தைய தேர்தல் நிலவரம்:

கேரளாவில் காங்கிரஸும் இடதுசாரிகளும் எதிரெதிர் அணியில் களம் காண்பது அம்மாநில அரசியலுக்கு புதியது அல்ல.   2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது வடக்கு கேரளாவில் உருவாக்கப்பட்டதுதான் வயநாடு மக்களவைத் தொகுதி. வயநாடு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகள் 3 உள்ளன. அதாவது, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் சட்டசபைகளை உள்ளடக்கியது. 2009ஆம் ஆண்டு முதல் வயநாடு மக்களவை தேர்தலை சந்தித்து வருகிறது. 2009, 2014,2019 ஆகிய 3 தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியது.

2009ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஷானவாஸ் 4 லட்சத்து 10 ஆயிரத்து 703 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அத்தேர்தலில் சிபிஐ ரஹ்மத்துல்லா 2 லட்சத்து 57 ஆயிரத்து 264 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஷானவாஸ் 1,53,439 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 2019 தேர்தலிலும் காங்கிரஸின் ஷானவாஸ் மீண்டும் வெற்றி பெற்றார். 3.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால், 2019ஆம் ஆண்டுக்கு பிறகு தான் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தொகுதியானது வயநாடு. காங்கிரஸ் மூத்த தலைவர் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதாவது, 2019 தேர்தலில் காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (எம்), புரட்சிகர சோஷலிச கட்சி ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19-ஐ வெற்றது. தேசிய அளவில் 53 இடங்களில் 15 இடங்கள்  காங்கிரஸுக்கு இங்கேயே கிடைத்தது. இதனால் கேரளா காங்கிரஸுக்கு மிகமிக முக்கியமான தேர்தல் களமாகியுள்ளது. 2019ல் ராகுல் காந்தி 7,06,367 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ கட்சியின் சுனீர் 2,74,597 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ராகுல் காந்தி சுமார் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

Latest News