5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி..தேசிய அளவில் பரபரப்பு!

Modi Resignation: டெல்லியில் இன்று மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றனர். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பிரதமர் பதவியில் இருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை அவரிடம் வழங்கினார். மேலும், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவைய கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் முறைப்படி கொடுத்திருக்கிறார் மோடி.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி..தேசிய அளவில் பரபரப்பு!
மோடி ராஜினாமா
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 05 Jun 2024 15:47 PM

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி:   டெல்லியில் இன்று காலை 11 மணியளவில் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றனர். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பிரதமர் பதவியில் இருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை அவரிடம் வழங்கினார். மேலும், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவைய கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் முறைப்படி கொடுத்திருக்கிறார் மோடி. அமைச்சரவையின் ராஜினாமாக்களைவும், 17வது மக்களவை கலைக்கும் பரிந்துரையையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். புதிய அரசு பதவி ஏற்கும் வரை இடைக்கால பிரதமராக மோடி நீடிக்க வேண்டும் எனவும் குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்துள்ளார். இதனை மோடியும் ஏற்றுக் கொண்டார்.

ஜூன் 8ல் பதவியேற்பு?

மோடி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இது தொடர்பாக வரும் 7ஆம் தேதி என்டிஏ கூட்டணி எம்பிக்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. தொடர்ந்து, வரும் 8ஆம் தேதி மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், தொடர்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சாதனையை பிரதமர் மோடி சமன் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மையை இழந்த பாஜக:

லகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவது ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பாஜக கூட்டணி 292 இடங்களிலும், பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜகவின் பெருந்தலைகள் கூறி வந்த நிலையில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை.

அதேபோல, I.N.D.I.A கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. அரசியில் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தி பேசும் மாநிலங்களில் I.N.D.I.A கூட்டணி கணிசமான வெற்றியை பதிவு செய்துள்ளது.  இருப்பினும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் அடுத்த என்ன என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அவர்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமானால் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜேடியு தலைவர் நிதிஷ்குமர் ஆகியோரின் ஆதரவு தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News