5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PM Swearing-in Ceremony Date: மோடி பதவியேற்பு விழா.. தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி நாளை இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அவருடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். மோடி மற்றும் இதர அமைச்சர்களுக்கு  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்று பெருமையை மோடி பெறுகிறார். இந்த பதவியேற்பு விழாவில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.  மோடி பதவியேற்பு விழா நடைபெறும் சுற்றியுள்ள பகுதியில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

PM Swearing-in Ceremony Date: மோடி பதவியேற்பு விழா..  தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு!
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Jun 2024 10:40 AM

பிரதமராக நாளை பதவியேற்கிறார் மோடி: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைப் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்தது. 240 இடங்களுட்ன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளது. இதனை அடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணயின் கட்சியின் அனைத்து தலைவர்களும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட கூட்டணி கட்சி எம்.பிக்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் என்டிஏ தலைவராக மோடியை பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் முன்மொழிய அனைவரும் அதை வழிமொழிய மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Also Read: ராஷ்டிரபதி பவனில் இருந்து வந்த அழைப்பு.. ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி!

எப்போது நடைபெறும்?

இந்த கூட்டம் முடிந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்.பிக்களின் ஆதரவு கடிதத்துடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேற்று மாலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பாஜகவுக்கான தங்களது ஆதரவுக் கடிதங்களை வழங்கினர். இதனை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் முர்மு, நாட்டின் புதிய பிரதமதராக மோடியை நியமித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து, 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி நாளை இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அவருடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். மோடி மற்றும் இதர அமைச்சர்களுக்கு  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்று பெருமையை மோடி பெறுகிறார். இந்த பதவியேற்பு விழாவில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

மூன்று அடுக்கு பாதுகாப்பு

மோடி பதவியேற்பு விழா நடைபெறும் சுற்றியுள்ள பகுதியில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது, குடியரசு தலைவர் மாளிகை மற்றும் பதவியேற்பு விழா நடைபெறும் கர்தவ்யா பாத் ஆகியவற்றில் முதல் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருந்தினர்கள் தங்கும் இடங்களை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய டெல்லியை சுற்றிலும் மூன்றாவது அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு கட்டுப்பாடு அறைகள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து இடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ட்ரோன்கள், சிறிய ரக ஏர்கிராப்ட்கள், பாரா கிளைடர்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read: “மத்தியில் வலுவான அரசை என்டிஏ கூட்டணி அமைக்கும்” செய்தியாளரிடம் மோடி பேச்சு

Latest News