5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lok Sabha Election Results: நாளை வாக்கு எண்ணிக்கை.. மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்போது தொடங்கும்? எங்கு பார்க்கலாம்?

India General Election Vote Counting: 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 8.30 மணி முதல் மின்னணு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இருப்பினும், தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்த பிறகே, மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Lok Sabha Election Results: நாளை வாக்கு எண்ணிக்கை.. மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்போது தொடங்கும்? எங்கு பார்க்கலாம்?
தேர்தல் முடிவு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Jun 2024 18:51 PM

நாளை வாக்கு எண்ணிக்கை: நாட்டில் ஜனநாயக திருவிழா இறுதி கட்டத்தை எட்டியது. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 தொகுதிகளுக்கான 7 கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்தது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, மே 13ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, மே 20ஆம் தேதி ஐந்தாம் கட்டமும், மே 25ஆம் தேதி ஆறாம் கட்டமும், ஜூன் 1ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு மாலை முடிவுகள் அறிவிக்கப்படும்.  இந்த நிலையில், 543 தொகுதிகளில் பதிவான வாக்குகள் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு மாலை முடிவுகள் அறிவிக்கப்படும். மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை உறுதி செய்யும் தேர்தல் முடிவுகளை அறிய சர்வதேச நாடுகளும் ஆவலுடன் காத்திருக்கின்றன.

எப்போது வாக்கு எண்ணிக்கை?

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 8.30 மணி முதல் மின்னணு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இருப்பினும், தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்த பிறகே, மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை எங்கு பார்க்கலாம்?

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இணையதளமான www.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியை (Voter Helpline App) கூகுள் பிளே அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில், உங்களை தொகுதியின் முடிவுகளை கூட எளிதாக பார்க்கலாம். வேட்பாளர்களின் வெற்றி நிலை, முன்னணி நிலை, பின்தங்கியுள்ள வேட்பாளர்கள், தொகுதி வாரியான, மாநில வாரியான முடிவுகளை வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மூலம் பார்க்கலாம்.

உச்சக்கட்ட பாதுகாப்பு:

தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றரை கோடி பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 40 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 ஆயிரம் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை போலீசாருக்கு அடுத்தபடியாக 2வது அடுக்காக மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3வது அடுக்காக உள்ளூர் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களின் நுழைவாயிலில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட்டுள்ளனர்.

Latest News