5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kerala Loksabha Results: கேரளாவில் மலர்ந்தது தாமரை.. திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி!

Thrissur Loksabha Results: கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. வரலாற்றில் முதல்முறையாக ஒரு மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி வாகை சூடினார். இவர் 4 லட்சத்து 553 வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

Kerala Loksabha Results: கேரளாவில் மலர்ந்தது தாமரை.. திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி!
சுரேஷ் கோபி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 04 Jun 2024 16:21 PM

கேரளாவில் மலர்ந்த தாமரை: வரலாற்றில் முதல்முறையாக ஒரு மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி வாகை சூடினார். இவர் 4 லட்சத்து 553 வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு 3 லட்சத்து 27 ஆயிரத்து 405 வாக்குகள் கிடைத்தது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.முரளிதரனுக்கு 3 லட்சத்து 19 ஆயிரத்து 380 வாக்குகள் கிடைத்தது. இதுவரை கேரளாவில் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதில்லை. சுரேஷ் கோபி மூலம் கேரளாவில் பாஜக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. திருச்சூர் தொகுதியில் கடந்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றும் வரும் நிலையில், இந்த தேர்தல் பாஜக வெற்றியை பதிவு செய்துள்ளது.

Also Read: ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி? முடிவுக்கு வரும் நவீன் பட்நாயக்கின் சகாப்தம்!

கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் சசி தரூக்கும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, சசி தரூர் 3,35,518 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் 33,76,639 வாக்குகள் பெற்றுள்ளார். சுமார் 15,879 வாக்குகள் வித்தியாசத்தில் சசி தரூர் முன்னிலையில் உள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 298 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மட்டும் 240 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கருத்துக்கணிப்புகளுக்கு நேர் எதிர் மாறாக தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 272 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மட்டும் 97 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த இரண்டு கூட்டணி இடம் பெறாத மற்ற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம் பாஜகவுக்கு இந்த தேர்தல் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் கேரளாவில் பாஜக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Also Read: ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு ஆட்சி..? தோல்வி முகத்தில் ஜெகன்!

Latest News