5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தேதி குறித்த I.N.D.I.A கூட்டணி.. தேர்தல் முடிவு முன்பே எதிர்க்கட்சிகள் ஸ்கெட்ச்!

இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தல் குறித்தும், கூட்டணியின் எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க இந்த கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் நிலையில், அதற்கு முன்பாக இந்த கூட்டணி நடக்க உள்ளது.

தேதி குறித்த I.N.D.I.A கூட்டணி.. தேர்தல் முடிவு முன்பே எதிர்க்கட்சிகள் ஸ்கெட்ச்!
I.N.D.I.A கூட்டணி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 May 2024 10:33 AM

தேதி குறித்த I.N.D.I.A கூட்டணி: 18வது மக்களவையை தேர்வு செய்ய 7 கட்டத் தேத்தல் (ஏப்ரல் 19,26, மே 7,13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடக்கிறது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் I.N.D.I.A கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. பத்தாண்டு காலம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற பாஜக முயன்று வருகிறது. பாஜகவுக்கு எப்படியாவது கடிவாளம் போட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்த்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில், இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தல் குறித்தும், கூட்டணியின் எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க இந்த கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் நிலையில், அதற்கு முன்பாக இந்த கூட்டணி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முன்னாள துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ரோர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

Also Read: கரையை கடந்தது ரீமல் புயல்.. மேற்கு வங்கம், வங்க தேசத்தில் பலத்த சேதம்!

ஜூன் 1ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்?

குறிப்பாக, இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் ஜூன் 2ஆம் தேதி சரணடைய உள்ள நிலையில், அதற்கு முன்னதாக  நடைபெறும் I.N.D.I.A கூட்டணியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், கூட்டணி ஏற்கனவே 272 இடங்களை தாண்டிவிட்டதாகவும், மொத்தம் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷும் கூறுகையில், “தப்போது ஆறு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 486 இடங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. பதவியில் இருந்து விலகும் பிரதமர் தனது ஓய்வுக்காலத்தில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறார். பாஜகவின் தலைவிதி முடிவு செய்யப்பட்டுவிட்டது” என்றார்.

கடந்த 2014 தேர்தலில் பாஜக 282 இடங்களில் வென்ற நிலையில், 2019ல் 303 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 303 இடங்களில் வென்றது மட்டுமில்லாமல் 224 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றது. எனவே, தேர்தல் பிரச்சாரத்தில் தொடக்கத்தில் இருந்தே பாஜக 400 இடங்கள் என்று கூறி வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் 2014 தேர்தலில் 44 இடங்களில் வென்ற நிலையில், 2019 தேர்தலில் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? பிரசாந்த் கிஷோர் நறுக்!

Latest News