5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கார்த்திகை தீபம் சீரியலில் தீபா உயிருக்கு வர போகும் ஆபத்து என்ன?

Karthigai Deepam serial update: போலி சாமியார் சொன்ன பரிகாரம், தீபா உயிருக்கு வர போகும் ஆபத்து என்ன என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

கார்த்திகை தீபம் சீரியலில் தீபா உயிருக்கு வர போகும் ஆபத்து என்ன?
கார்த்திகை தீபம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jun 2024 14:06 PM

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரியா ஐஸ்வர்யாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட அவள் உன்னை மாட்டி விட நான் போலீசை கூட்டிட்டு வரல என்று சமாளிக்கிறாள். இதையடுத்து போட்டோகிராபர் சுரேஷ் வீடு காட்டப்படுகிறது. சுரேஷ் ரியா அபிராமியை சுட்டு தள்ளிய வீடியோவை பார்த்து பயந்து கொண்டிருக்க ரியா போன் செய்து மரியாதையா அந்த வீடியோவை என்கிட்ட கொடுத்துடு, உனக்கு தேவையான பணத்தை நான் தரேன் என்று மிரட்டுகிறாள். அடுத்து போலீசும் சுரேஷை கூப்பிட்டு வார்னிங் கொடுத்து அனுப்ப அடுத்து அருண், ஆனந்த் சுரேஷ் வீட்டை சுற்றி வளைத்து கதவை தட்ட இவர்களை பார்த்த போட்டோகிராபர் இது பெரிய பிரச்சனை போல, இங்க இருந்து எஸ்கேப் ஆகிறது தான் நமக்கு நல்லது என்று பின்பக்கமாக தப்பி ஓட முயற்சி செய்கிறான்.

அருண், ஆனந்த அவனை துரத்தி பிடிக்க முயற்சி செய்து முடியாமல் விட்டு விடுகின்றனர், அடுத்து தீபாவும் ரம்யாவும் ஹசிரமத்திற்கு வருகின்றனர், அங்கு 20 பேர் வெளியே தூங்கி கொண்டிருக்க ஒருவன் வாங்க வாங்க சாமியார் உங்களுக்காக தான் காத்திட்டு இருக்காரு. இந்த சாமியாரை நினைத்த உடனே எல்லாம் பார்க்க முடியாது, யாரை பார்க்கணும் என்பதை அவர் தான் முடிவு பண்ணுவார் என்று ஓவர் பில்டப் கொடுக்கின்றனர்.

ரம்யாவும் நானும் விசாரிச்சேன், அவரே நம்ம பேர் என்னனு கூட சொல்வாருன்னு கேள்வி பட்டேன் என்று அளந்து விடுகிறாள். பிறகு உள்ளே சென்று சாமியாரை சந்திக்க அவர் உங்க பேர் ரம்யா.. உங்க பேர் தீபா என்று பெயரை மாற்றி சொல்ல ரம்யா ஷாக் ஆகிறாள். இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சாமியார் உங்க பிரச்சனை சரியாகணும்னா தண்ணீரில் மிதக்கும் பரிகாரம் ஒன்று இருக்கு என்று சொல்ல தீபா தனக்கு நீச்சலும் தெரியாது, தண்ணீரில் மிதக்கவும் தெரியாது என்கிறாள், ரம்யாவும் என்ன நீங்க இவ்வளவு கஷ்டமானதை பரிகாரம்னு சொல்றீங்க என்று கேட்கிறாள். சாமியார் பீப்பாயில் உட்கார வைத்து தண்ணீரில் மிதக்க விடுவோம். காலையில் இருந்து சூரிய அஸ்தமனம் வரைக்கும் நம்பிக்கையான ஒருவரிடம் பீப்பாயில் கட்டிய கயிறை கொடுத்து விடுவோம்.. இந்த பரிகாரத்தை செய்யலனா நான் சொல்ற மாதிரி தான் நடக்கும் சொல்லி பயம் காட்டுகிறார்.

அடுத்து ஐஸ்வர்யா வீட்டில் உடம்பு முடியாமல் படுத்து இருக்க அருணாச்சலம் அவளை கூப்பிட்டபடி இருக்க ஐஸ்வர்யா அப்படியே படுத்து இருக்க அவரும் ரூமுக்குள் வந்து நான் கூப்பிட்டு கொண்டே இருக்கேன், நீ இப்படி படுத்து இருக்க, அங்க அபிராமி ஹாஸ்பிடலில் இருக்கா நீ ஹாயா தூங்கிட்டு இருக்க என்று கோபப்படுகிறார்.

ஐஸ்வர்யா அத்தைக்காக வேண்டிக்கிட்டு அலகு குத்திய விஷயத்தை சொல்ல அருணாச்சலம் இதை முதல்லயே சொல்லி இருக்கலாம்ல என்று மனம் இறங்குகிறார், ஐஸ்வர்யா என்ன விஷயம் என்று கேட்க அருணாச்சலம் பீரோவில் இருந்து பணம் எடுக்கணும் என்று சொல்வதோடு நீ ரெஸ்ட் எடு, நானே எடுத்துகிறேன் என்று சொல்கிறார்.

Also read… சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவிற்கு உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகை

ஐஸ்வர்யா பணம் என்றதும் நானே எடுத்துகிறேன் என்று சாவியை வாங்கி போய் பீரோவை திறக்க பீரோ முழுவதும் நகையும் பணமுமாக இருப்பதை பார்த்து வாயை பிளக்கிறாள். தனது அம்மாவுக்கு வீடியோ கால் செய்து காட்ட அவள் மொத்தத்தையும் ஆட்டைய போட்டுடலாம் நான் கிளம்பி வரேன் என்று சொல்ல ஐஸ்வர்யா இப்போ எதுவும் செய்ய முடியாது, சந்தேகம் வராத மாதிரி செய்யணும் அதுக்கு ஐடியா சொல்லு என்று கேட்க ராஜேஸ்வரி ஒரு ஐடியா சொல்கிறாள்.

பிறகு ஐஸ்வர்யா பணத்தை கொண்டு போய் அருணாச்சலத்திடம் கொண்டு போய் கொடுக்க அவர் பணத்தை மட்டும் வாங்கி கொண்டு சாவியை மறந்து செல்ல ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறாள், இந்த நேரம் பார்த்து மீனாட்சி அங்கு வந்து சாவியை கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.