5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கார்த்திகை தீபம் சீரியலில் ஐஸ்வர்யாவை அலற விட்ட அருண்

Karthigai Deepam serial update: ஐஸ்வர்யாவை அலற விட்ட அருண், கழுத்தில் கத்தியை வைத்த ரியா என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

கார்த்திகை தீபம் சீரியலில் ஐஸ்வர்யாவை அலற விட்ட அருண்
கார்த்திகை தீபம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Jun 2024 15:58 PM

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா வைரத்தில் பங்கு கேட்க ரியா நீ நான் சொல்ற மாதிரி நடந்துக்கிட்டா நீ கேக்குற பங்கை கொடுப்பதோடு உங்க அம்மாவுக்கு கொடைக்கானலில் ஒரு எஸ்டேட் மற்றும் ஒரு கம்பெனியையும் வாங்கி தருவேன் என்று சொல்கிறாள். இதை கேட்டு ஐஸ்வர்யா பேராசையில் கொடைக்கானலில் எஸ்டேட்டா என்று வாயை பிளக்க அவளுக்கு பளாரென அறை விழுகிறது. அருண் எங்க அம்மா அங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க, நீ சொத்தை பத்தி பேசிட்டு இருக்க, யார் கூட டி பேசிட்டு இருக்க என்று போனை பிடிங்கி பார்க்க ஐஸ்வர்யா பதற ரியா ராஜேஸ்வரி போனில் இருந்து போன் செய்ததால் அம்மாவிடம் தான் பேசிட்டு இருந்ததாக சொல்லி சமாளிக்கிறாள். இதை தொடர்ந்து ரம்யா பரிகாரம் செய்ய ஏலத்தில் வாங்கி வந்த அம்மன் சேலையை கட்டி கொண்டு சாமியாரை பார்க்க கிளம்ப மீனாட்சி உனக்கு ஏதோ பெரிய ஆபத்து வருவது போல் கனவு கண்டதாக சொல்லி தடுக்க முயற்சிக்க கனவு தானே அக்கா, எனக்கு ஒன்னும் ஆகாது என்று கிளம்பி செல்கிறாள்.

அம்மன் புடவையில் வரும் தீபாவை பார்த்து ரம்யா அதிர்ச்சி அடைகிறாள், இந்த புடவையை மாற்ற வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அவள் வீட்ல யார் கிட்டயும் எதுவும் சொல்லலையே என்று கேட்க அவள் கார்த்திக்கிடம் சொன்னதாக சொல்ல ரம்யா மேலும் ஷாக் ஆகிறாள். ஆனால் கார்த்திக் நான் சொன்னதை கேக்கும் நிலைமையில் இல்ல, பிரம்மை பிடித்தது போல் உட்கார்ந்து இருந்ததாக சொல்ல ரம்யா கொஞ்சம் நிம்மதி அடைகிறாள். மறுபக்கம் கார்த்திக் அப்படியே உட்கார்ந்திருக்க மீனாட்சி அவனுக்கு பால் கொண்டு போய் கொடுத்து குடிக்க சொல்கிறாள், நீயே இப்படி உடைந்து போய்ட்டா ரியாவை எப்படி பிடிக்கிறது? அவளை பத்தி எந்த ஆதாரமும் இல்லனு சொல்றாங்க. அந்த கேமரா மேன் யார்? அவனை உனக்கு தெரியுமா என்று கேட்க கார்த்திக் மொத்தமாக ஒரு ஈவென்ட் கம்பெனி கிட்ட கொடுத்துட்டேன் என்று சொல்கிறான். இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, தீபா சாமியாரை பார்க்கணும், அத்தை சரியாக பரிகாரம் பண்ணனும் என்று சொன்னபடியே செல்கிறாள். ரம்யாவும் தனது வார்த்தை ஜாலத்தால் தீபாவை தீர்த்து கட்டும் திட்டத்துடன் அழைத்து செல்கிறாள். மறுபக்கம் ரம்யா அருண் ஐஸ்வர்யாவை கோவிலுக்கு அழைத்து நீ அன்னைக்கு எங்க அம்மாவுக்காக என்னமோ பண்ணுவேன்னு பில்டப்பா கொடுத்தியா இப்போ அது ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்று சொல்லி அழைத்து வந்து உப்பின் மீது அங்கபிரதர்சனம் செய்ய சொல்கிறான்.

Also read… விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’… சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ்!

வசமாக சிக்கி கொண்ட ஐஸ்வர்யா பண்ண முடியாது என்று மறுக்க முடியாமல் தவிக்கிறாள், இதையடுத்து ஐஸ்வர்யா முதல் பரிகாரத்தை முடித்ததும் அருண் சாமி அடுத்த பரிகாரத்தை சொல்லுங்க என்று சொல்கிறான். சாமியார் ஐஸ்வர்யாவை கையை காட்ட சொல்லி அக்கினி சட்டியை வைத்து அலற விடுகிறார். அடுத்ததாக ரியாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு ராஜேஸ்வரி மார்க்கெட் சென்றிருக்க திரும்பி வரும் போது போலீசுடன் வந்து இறங்க ரியா அதிர்ச்சி அடைகிறாள். கிச்சனுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் அவள் ரியா ரியா என அழைத்தபடியே ராஜேஸ்வரி உள்ளே வர கழுத்தில் கத்தியை வைத்து அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Latest News