5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கார்த்திகை தீபம் சீரியலில் சொத்தை ஆட்டைய போட ஐஸ்வர்யா செய்த தில்லாலங்கடித்தனம்

Karthigai Deepam serial update: அபிராமி வீட்டு சொத்தை ஆட்டைய போட ஐஸ்வர்யா செய்த தில்லாலங்கடித்தனம், அருணுக்கு வந்த சந்தேகம் என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

கார்த்திகை தீபம் சீரியலில் சொத்தை ஆட்டைய போட ஐஸ்வர்யா செய்த தில்லாலங்கடித்தனம்
கார்த்திகை தீபம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jul 2024 12:41 PM

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி தீபாவுக்கு போன் செய்து நீ உஷாரா இரு தீபா, எனக்கு ஏதோ தப்பா படுது.. தாலி வேற இல்லாமல் இருக்க என்று சொல்லி போனை வைக்கிறாள். அதன் பிறகு ரம்யா வீட்டிற்கு வர அவரது அப்பா அபிராமி குறித்து நலம் விசாரிப்பதோடு அவங்களுக்கு நீ துணையாக இருக்கிறதை பார்க்கும் போது சந்தோசமாக இருப்பதாகவும் சொல்கிறார். அடுத்து ரம்யா போலி சாமியார் சேகரை வர வைத்து அந்த தீபாவை எப்படியாவது பரிகாரம் பண்ண வைக்கணும், நான் வேண்டாம் வேண்டாம்னு தான் சொல்லுவேன். ஆனால் நீ பேசுற பேச்சு தீபாவை நான் பன்றேன்னு சம்மதம் சொல்ற வைக்குற மாதிரி இருக்கனும் என்று சொல்கிறாள். இந்த நேரம் பார்த்து தீபா காலிங் பெல் அடிக்க ரம்யா அதிர்ச்சியாக சேகர் ஒளிந்து கொள்கிறான்.

இதை தொடர்ந்து போட்டோகிராபர் சுரேஷ் கார்த்திக்கு போன் செய்து ரியா தன்னை போன் செய்து மிரட்டுவதாக சொல்லி அந்த புட்டேஜ் தன்னிடம் இருக்கும் விஷயத்தையும் சொல்ல கார்த்திக் நான் வந்து வாங்கிக்கறேன் என்று சொல்லி போனை வைத்து விட்டு சுரேஷை பார்க்க கிளம்பி வருகிறான். அதே போல் ஐஸ்வர்யா மற்றும் ரியா என இருவரும் முகத்தை மறைத்தபடி அங்கு வந்திருக்கின்றனர்.

Also read… குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா – வாழ்த்தும் ரசிகர்கள்

இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கார்த்திக் போட்டோகிராபரை சந்திக்க சென்றபோது ரியாவை பிடிக்க முயற்சி செய்தேன் கடைசியில் முடியாமல் போகிறது. மறுபக்கம் ரம்யா தீபாவிடம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம் என்று சொல்லி நல்லா இருந்தா சொல்லு போட தீபா நீ என்ன பேசுற? அத்தைக்காக நான் கண்டிப்பா இதை செஞ்சு தான் ஆகணும் என்று சொல்கிறாள். உனக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பதில் சொல்றது என்று ரம்யா கேட்க உடனே தீபா போனை எடுத்து இந்த பரிகாரத்தை நான் விருப்பப்பட்டு தான் செய்கிறேன் இதுல எனக்கு எந்த பிரச்சினையை ஏற்பட்டாலும் அதற்கு நாம் மட்டுமே பொறுப்பு என்று பேச ரம்யா நம்ப ரூட்டு கிளியர் என சந்தோஷப்படுகிறாள்.

அடுத்ததாக ஐஸ்வர்யா ரூமில் இருக்க அருண் அவளை எழுந்து சென்று முகத்தை கிளம்பி வர சொல்ல ஐஸ்வர்யா சென்றதும் தலையணை கீழே அச்சு வைத்த சோப்பு இருப்பதை பார்த்து சந்தேகப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.